State, Crime

வருமானத்திற்கு அதிகமாக பலகோடிகள் சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது சமூக ஆர்வலர் புகார்

Photo of author

By Parthipan K

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

 

 

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக சமூக ஆர்வலர் செந்தில்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார்.

 

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தின் தலைமைச் செயலாளருக்கு மத்திய பணியாளர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது.

 

நாகர்கோவிலைச் சேர்ந்த பீலா ராஜேஷ் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிறகு ராஜேஷ் தாஸ் என்ற அதிகாரியை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 1997-ம் ஆண்டு பீலா ராஜேஷ் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றார்.

 

இவர் முதலில் இந்திய ஹோமியோபதி மருத்துவம், மற்றும் மத்திய ஜவுளித்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றினார். அதன் பிறகு தமிழகத்தில் மீன்வளத் துறையில் பணி நியமனம் செய்யப்பட்டு பின்னர் சென்ற ஆண்டு 2019இல் சுகாதாரத்துறை செயலாளராக மாற்றப்பட்டார். கரோனாத் தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்டவர் பீலா ராஜேஷ். எனினும் அவரை நீக்கிவிட்டு தற்போது ஜெ. ராதாகிருஷ்ணனை நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

இதன்பிறகு அவர் வருவாய்த்துறையில் பணி நியமனம் செய்யப்பட்டார். மேலும் இவர் கிருஷ்ணகிரியில் கரோனா தடுப்பு அதிகாரியாக பணியாற்றிய போது, வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்ததின் பேரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

Social activist complains about Peela Rajesh adding too much property in excess of income

இதன் அடிப்படையில் இவர் ஜூலை 25 ஆம் தேதி பல கோடிகளுக்கு மேல் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் பீலா ராஜேஷ் மீது சுமத்தப்பட்ட புகாரை விசாரிக்கும்படி தலைமைச் செயலாளருக்கு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இறந்த தாயை தள்ளுவண்டியில் கொண்டு சென்று எரித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டுள்ளது மனித உரிமை ஆணையம்?

விஜய் சேதுபதி நடித்துள்ள “துக்ளக் தர்பார்” படத்தின் அடுத்த ரிலீஸ்

Leave a Comment