இல்லத்தரசிகள் தெரிந்திருக்க வேண்டிய சில முக்கிய வீட்டுக் குறிப்புகள்..!!

0
132

*வெள்ளிப் பொருட்கள் உள்ள இடத்தில் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைத்தால் வெள்ளி பொருட்கள் கருக்காது.

*சமையல் அறையில் எலுமிச்சை பழச் சாற்றினால் ஏற்படும் வெள்ளை கறையை நீக்க, அந்த இடத்தில் சிறிது வெண்ணையை தடவி சில மணி நேரம் கழித்து துடைத்தாள் கறை நீங்கி தரை பளிச்சென்று இருக்கும்.

*கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டு சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் கையில் மாவு ஒட்டாது.

*கொஞ்சம் வசம்பை தட்டி, ரவா, மைதா, அரிசி உள்ள பாத்திரங்களில் போட்டு வைத்தால் பூச்சி, புழுக்கள் வராமல் இருக்கும்.

*லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

*வாழைப்பழத்தை ஈரத் துணியில் சுத்தி வைத்தால் சீக்கிரம் கருத்து விடாமல் பிரஷ்ஷாக இருக்கும்.

*கடுகு எண்ணெய் கலந்த நீரில் ஒரு மிருதுவான துணியை நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

*சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் நான்கைந்து கிராம்பை போட்டால் எப்போதும் எறும்பு வராது.

*பூந்தொட்டியில் ரோஜா செடியை நடும்போது அத்துடன் இரண்டு சிறிய வெங்காயத்தை ஊன்றி வைத்தால், பூச்சிகள் செடியை அரிக்காமல் பாதுகாக்கும்.

*ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால், ஆணி சுவரில் சுலபமாக இறங்கும்.

*துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

*எவர்சில்வர் பாத்திரங்களை வாரம் ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வந்தால் புதிது போல் பளபளவென இருக்கும்.

Previous articleதோசைக்கல்லில் கருப்பு அதிகம் படிந்து விட்டதா:? இதனை பளிச்சென்று ஆக்குவதற்கான எளிய டிப்ஸ்!
Next articleபுதிய மைல் கல்லை எட்டிய வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன்