தோசைக்கல்லில் கருப்பு அதிகம் படிந்து விட்டதா:? இதனை பளிச்சென்று ஆக்குவதற்கான எளிய டிப்ஸ்!

0
127

தோசைக்கல்லில் கருப்பு அதிகம் படிந்து விட்டதா:? இதனை பளிச்சென்று ஆக்குவதற்கான எளிய டிப்ஸ்!

 

தோசைக்கல் கருப்பாக இருக்கின்றது என்று தண்ணீரில் கழுவிவிட்டால் அந்த தோசைக்கல்லில் மீண்டும் தோசை வரவைப்பது மிகவும் கடினமாகும்.இதனாலையே பல பெண்கள் தோசைக்கல்லை அடிக்கடி கழுவ மாட்டார்கள்.ஆனால் தோசைக்கல்லை கழுவினாலும் எளிதில் தோசை
மொறுமொறுவென்று வருவதற்கும்,தோசை கல்லில் உள்ள கருப்பை நீக்குவதற்கும்
உங்களுக்கான எளிய டிப்ஸ்!

தோசைக் கல்லில் உள்ள கருப்பை நீக்க!

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள்: அரை டீஸ்பூன்
கல்லுப்பு:ஒரு டீஸ்பூன்
நல்லெண்ணெய்:2 டீஸ்பூன்

இந்த மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும்.இந்த கலவையை தோசைக் கல்லின் மேல் பக்கத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்துவிட வேண்டும்.பின்னர் காலையில் எழுந்தவுடன் நன்றாக தோசைக்கல்லை கழுவிவிட்டால் தோசைக்கல்லில் உள்ள கருப்பு கரை முற்றிலுமாக நீங்கி பளிச்சென்று ஆகிவிடும்.

இதனை செய்வதற்கு கடினமாக இருந்தால்,அனைவர் வீட்டிலும் எப்பொழுதாவது
புளிச்சகீரையை சமைக்கும் வழக்கம் இருக்கும்.புளிச்சக் கீரையை வேகவைத்த சூடான தண்ணீரை,தோசைக்கல்லில் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைத்துவிட வேண்டும்.மூன்று மணி நேரம் கழித்து அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட்டு வேறொரு தண்ணீரில் கழுவி பாருங்கள்.நீங்கள் நம்ப முடியாத அளவிற்கு தோசைக்கல் பளிச்சென்று ஆகிவிடும்.

கழுவிய தோசைக்கல்லில் எளிமையாக தோசை வர வைப்பது எப்படி?

ஒரு காட்டன் துணியில் சிறிதளவு கல் உப்பை எடுத்து மூட்டை போன்று கட்டிக்கொள்ள வேண்டும்.பின்னர் கழுவி வைத்த தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மீதமாக சூடானதும் அந்த உப்புக்கல் மூட்டையை வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.இல்லையென்றால் வெங்காயத்தை எடுத்து மீதமாக சூடான தோசைக்கல்லில் நன்றாக தேய்க்க வேண்டும்.

பின்னர் தோசை ஊற்றி பாருங்கள் நான்ஸ்டிக் தவா கூட தோற்றுவிடும்.அவ்வளவு மொறுமொறுவென்று தோசை வரும்.

குறிப்பு:
தோசைக்கல்லை சுத்தம் செய்வதற்கு புளிச்சைக்கீரை தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தால்,தோசை சுடும் பொழுது நீங்கள் இந்த முறையை பயன்படுத்த தேவையில்லை.ஏனெனில் நீங்கள் எதுவும் செய்யாமலேயே தோசை மொறுமொறுவென்று வரும்.

 

 

author avatar
Pavithra