இந்தியாவின் ஒயிட்வாஷ் சாதனைகள்:கோலியின் கிரீடத்தில் மற்றொரு சிறகு! நேற்றைய போட்டியின் சில சுவாரஸ்யங்கள்!
இந்திய அணி நேற்று நியுசிலாந்தை வெற்றி பெற்று அந்த அணியை ஒயிட்வாஷ் செய்துள்ள நிலையில் பல சாதனைகளைப் படைத்துள்ளது.
இந்திய அணி உலகக்கோப்பையில் நியுசிலாந்திடம் அடைந்த தோல்விக்காக அந்த அணிக்கெதிரான தொடரை வெற்றி பெற்று இப்போது பழிதீர்த்துக் கொண்டுள்ளது. கடந்த ஒரு வருடக்காலமாக கோலி தலைமையிலான அணி தான் கலந்துகொளும் எல்லா வகையான தொடர்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.
இந்திய அணி அந்நிய தொடரில் நடந்த ஒரு தொடரில் அனைத்து போட்டிகளையும் வென்று தொடரை வொயிட்வாஷ் செய்வது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னதாக 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை அதன் மண்ணிலும் 2019 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸை அதன் மண்ணிலும் ஒயிட்வாஷ் செய்துள்ளது.
அதுபோல இந்திய அணியின் கேப்டன் கோலி தன் தலைமையில் அதிக அளவிலான இரு நாடுகளுக்கு இடையிலான டி 20 தொடரை வென்றவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவர் இதுவரை 10 தொடர்களை வென்றுள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா கேப்டன் பாஃப் டு பிளஸ்சி இருக்கிறார்.
டி 20 போட்டிகளில் தனது மண்ணில் அதிக அளவிலான போட்டிகளில் தோற்ற அணி என்ற மோசமான சாதனையை நியுசிலாந்து அணி பெற்றுள்ளது. அந்த அணி தங்கள் மண்ணில் விளையாடிய 59 போட்டிகளில் தோற்றுள்ளது.
நேற்றைய போட்டியில் இந்தியாவின் ஷிவம் துபே ஒரே ஓவரில் 34 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது டி 20 போட்டிகளில் மோசமான 2 ஆவது பந்துவீச்சாகும். இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டும் ஸ்டூவர்ட் பிராட் இந்தியாவிற்கு எதிராக 36 ரன்களை விட்டுக்கொடுத்தது முதல் இடத்தில் உள்ளது.