காலையில் சாப்பிட வேண்டிய முக்கிய சில உணவுகள்!!
பொதுவாக நாம் காலையில் எந்த உணவை சாப்பிடுகின்றோமோ அந்த உணவுதான் நமது ஒட்டுமொத்த இன்றியமையாத ஆரோக்கியத்திற்கு காரணமாக இருக்கும். காலையில் எழுந்தவுடன் டீ காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. ஆனால் டீ காபியை விடவும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடியதாகும் உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கக் கூடியதாகவும் இருக்க நாம் காலையில் என்ன சாப்பிடலாம் என்ற கேள்வி நம்மில் பலருக்கும் எழுவதுண்டு. காலையில் நாம் நமக்கு அதிக சக்தியை கொடுக்கக் கூடியதாகவும், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்வதாகவும் உள்ள உணவு வகைகளை பார்ப்போம்.
1. தேன் கலந்த வெதுவெதுப்பான நீர்
பொதுவாக தேன் மிகவும் ஆரோக்கியமான உணவு. தேனில் விட்டமின்ஸ், மினரல்ஸ் , என்சைம்கள், நமது குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு தேவையற்ற கழிவுகளான டாக்ஸின்களையும் வெளியேற்றும். மேலும் இது செரிமான உறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி செய்யும். எனவே காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பருகுதல் மிகவும் நல்லது.
2. ஊற வைத்த பாதாம்
பாதாமில் மெக்னீசியம் விட்டமின் ஈ ,புரோட்டின், பைபர் மற்றும் நல்ல கொழுப்பு அமிலங்கள் இன்று சொல்லக்கூடிய ஒமேகா 3 ,ஒமேகா 6, அதிக அளவில் உள்ளது. நீண்ட உணவு இடைவெளிக்கு பின் காலை வெறும் வயிற்றில் சாப்பிட உகந்த உணவு. 100 கிராம் பாதாமில் 21 கிராம் புரோட்டின் உள்ளது. இது வயிறு நிரம்பிய ஒரு உணர்வை கொடுக்கும். ஒரு கைப்பிடி அளவு பாதாமை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் உட்கொள்ள வேண்டும். பாதாமை சாப்பிடுவதற்கு முன்பு அதன் தோலை உரிக்க வேண்டும். போலானது பாதாமில் உள்ள சத்துக்கள் நம் உடலில் சேர்வதை தாமதப்படுத்தும் எனவே தோலை உரித்து விட்டு சாப்பிடுவது நல்லது.
3. பப்பாளி
பழங்களில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட ஒரு சிறந்த உணவு பப்பாளி. உடலில் உள்ள கழிவுகளை எளிதில் வெளியேற்றவும், உடல் இயக்கத்தை சீராக்கவும், மலச்சிக்கல், இந்த பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும் பொருள் பப்பாளி. பப்பாளி பழத்தில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும். மேலும் வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய ஒரு பழம் பப்பாளி. எனவே சர்க்கரை வியாதி, உடல் பருமன்,இரத்த கொதிப்பு, போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க பப்பாளி சாப்பிடுவது நல்லது.
4. தர்பூசணி
காலை வெறும் வயிற்றில் சாப்பிட சிறந்த மற்றொரு பழம் தர்பூசணி. 90% நீர் சத்தும் மிக அதிக எலக்ட்ரோலக்சும் கொண்டது தர்பூசணி. இது கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீர் வறட்சியை தவிர்க்க வல்லது. உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கக் கூடியது. மிக குறைந்த கலோரிகளைக் கொண்ட பழம் என்பதால் உடல் ரீதியாக எந்த ஒரு தொந்தரவு இருப்பவர்களும் தாராளமாக சாப்பிடலாம். கோடை காலத்தில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட மிகச் சிறந்த ஓர் உணவு.
5. முளைக்கட்டிய பச்சைப் பயறு
பச்சைப் பயறை அப்படியே சாப்பிடுவதை விட முளைகட்டி அதனை சாப்பிடுவது இன்னும் அதிக நன்மைகளைத் தரும். முளைகட்டிய பச்சை பயிரில் அதிக அளவு புரதம், நார்ச்சத்து, விட்டமின் பி மற்றும் சி, கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் உடலின் மெட்டபாலிசத்தை தூண்டவும், உடலின் கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள அதிக அளவு புரதம் சீரான தசை வளர்ச்சிக்கும் செல்கள் சேதம் அடைதலையும் தடுக்கும். ஆரோக்கியமான உடலை பெற உடல் பலமாக இருக்க காலை முதல் உணவாக இந்த பச்சைப் பயறை எடுத்துக் கொள்ளலாம்.
6. பழைய சோறு அல்லது நீராகாரம்
இது நம் எல்லோருக்கும் தெரிந்த எளிமையான உணவு. முந்தின நாள் இரவு சாதத்தில் நீரை ஊற்றி வைத்து காலையில் நமக்கு நீராகாரம் கிடைக்கும். சாதாரண சாதத்தை விட புளிக்க வைத்து சாதத்தில் நமக்கு கிடைக்கும் சத்துக்கள் அதிகம். விரைவில் சாதத்தை தண்ணீர் ஊற்றி ஊறவைக்கும் போது அதில், குளோபையோடிக் எனப்படும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகளவு பெருகி இருக்கும். இதன் மூலம் கிடைக்கக்கூடிய இந்த ப்ரோ பயோடிக் குடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. செரிமான தொடர்பான பிரச்சனைகள் வராமல் இருக்கும் சாப்பிடும் உணவில் உள்ள சத்துக்கள் உடல் உறிஞ்சப்படவும் இது உதவுகிறது. எனவே காலை உணவாக நம் முன்னோர்கள் அதிகம் பயன்படுத்தி நீராகாரம் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.