தாயின் திடீர் மரணத்தால் விரக்தி அடைந்த மகன் விஷம் அருந்தி தற்கொலை! திருப்பூர் அருகே சோகம்!

Photo of author

By Sakthi

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்து இருக்கின்ற கரைப்புதூர் காளிநாதன் பாளையம் கிராமத்தை சார்ந்தவர் பொன்னுசாமி. இவருடைய மனைவி . அங்காத்தாள் இந்த தம்பதியரின் மகன் 25 வயதான ஜெகதீஷ் இவர் ஒரு தொழிலாளி என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், ஜெகதீஷின் தாயார் கடந்த மாதம் உடல் நலக்குறைவு காரணமாக, உயிரிழந்தார். தன்னுடைய தாயின் மீது அதீத அன்பும், பாசமும் கொண்டிருந்த ஜெகதீஷ் அவருடைய மறைவின் காரணமாக, மிகுந்த வேதனையுடன் இருந்து வந்ததாக தெரிகிறது.

ஜெகதீசுக்கு அவருடைய உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்கள் ஆறுதல் தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆனாலும் ஜெகதீஷ் ஒரு வித விரத்தியுடனே இருந்து வந்திருக்கிறார். ஆகவே அவர் தன்னுடைய வாழ்க்கையில் விரக்தி அடைந்து சம்பவம் நடைபெற்ற அன்றைய தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், பூச்சி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் மயங்கி கிடந்த ஜகதீஷை மீட்டு அண்டை வீட்டார்கள் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை பகுதியில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கே அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த சூழ்நிலையில், நேற்று மருத்துவர்களின் சிகிச்சை பலனளிக்காமல் ஜெகதீஷ் பரிதாபமாக உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அவருடைய அப்பா பொன்னுசாமி வழங்கிய புகாரின் அடிப்படையில் பல்லடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.