தாயின் கண்முன்னே உயிரிழந்த மகன்! சேலத்தில் நடந்த துயர சம்பவம்!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமரவேல்பாளைம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சுகுணா மகன் பூபதி(21) இவர் டிப்ளமோ படித்துவிட்டு கூலிக்கு தறி ஓட்டுபவர். இன்நிலையில் நேற்று பூபதி ஆனி அமாவாசையையொட்டி தனது தாயுடன் சேலம் சின்னப்பம்பட்டி அருகே பணிக்கானூர் ஊரில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்றார். அவர்கள் கோயிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது ஆட்டையாம்பட்டியில் இருந்து காக்காபாளையம் செல்லும் வழியில் உள்ள செக்குமேடு என்னும் பகுதியில் அவரது மோட்டார் சைக்கிளில் இருவரும் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராசிபுரத்தில் இருந்து இளம்பிள்ளை நோக்கி வந்த அரசு பேருந்து ஒன்று செக்குமேடு பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றுக் கொண்டிருந்தது. அப்போது பூபதி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து பஸ்ஸின் மீது மோதியது. அப்போது பூபதி இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவரது தாய் சுகுணா படுகாயமடைந்தார். அதனைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பூபதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். இதனையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்றவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது அப்குதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.