பாராளுமன்ற குழுவை மாற்றி அமைத்த சோனியா!! அவர் எடுத்த முடிவு என்ன!!

Photo of author

By Preethi

பாராளுமன்ற குழுவை மாற்றி அமைத்த சோனியா!! அவர் எடுத்த முடிவு என்ன!!

பாராளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 19) துவங்க உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, கட்சியின் பாராளுமன்ற குழுக்களை அமைத்து உள்ளார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளதாவது: பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிறப்பாகவும், திறமையாகவும் செயல்படுவதை உறுதி செய்யும் வகையில் நிர்வாக ரீதியான சில மாற்றங்களை செய்துள்ளேன். இரு குழுக்களும் நாள்தோறும் கூடி, அலுவலகம் தொடர்பாக விவாதிக்கும் என்று கூறியுள்ளார். மேலும் பாராளுமன்றத்தில் முக்கிய விவாதங்கள் நடப்பதற்கு முன்பாகவும், கூட்டத்தொடர் நடப்பதற்கு  இடையேயும் கூடி விவாதித்து முடிவு எடுப்பார்கள் என்று கூறினார்.

ராஜ்சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூட்டி இந்த இரு பாராளுமன்ற குழுவையும் ஆலோசனை நடத்துவார். பின்பு , லோக்சபா தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தொடர்கிறார், அவருக்கு துணைத் தலைவராக கவுரவ் கோகய் செயல்படுவார். லோக்சபாவின் தலைமைக் கொறடாவாக கே.சுரேஷ் செயல்படுவார். ரவ்னீத் சிங் பிட்டு, மாணிக்கம் தாகூர் ஆகியோர் கொறடாக்களாக இருப்பார்கள்.

காங்கிரஸ் தலைவர் மணிஷ் திவாரி, சசி தரூர் ஆகியோர் இந்த  கொறடா குழுவில் இடம் பெற்று உள்ளனர். ராஜ்சபா தலைவராக மல்லிகார்ஜூன கார்கே செயல்படுவார், துணைத் தலைவராக ஆனந்த் சர்மா இருப்பார். தலைமைக் கொறடாவாக ஜெய்ராம் ரமேஷும், கொறடா குழுவில் அம்பிகா சோனி, ப.சிதம்பரம், திக்விஜய் சிங், கே.சி.வேணுகோபால் ஆகியோர் இருப்பார்கள். இவ்வாறு சோனியா அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.