5 ஆண்டுகள் கழிந்து மீண்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்!!!

0
255
#image_title

5 ஆண்டுகள் கழிந்து மீண்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்!!!

5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நாளை(அக்டோபர்14) மகளிர் அணி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாடு முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த மகளிர் மாநாட்டில் மத்திய அரசு அண்மையில் அறிவித்த பெண்களுக்கான 33 சதவீதம் இடஒதுக்கீடு சட்டத்தை உடனே அமல்படுத்துவது கோரியும் மேலும் பல பத்திரிகைகள் தொடர்பாகவும் கலந்துரையிடல்கள் நடைபெறவுள்ளது என்று திமுக எம்பி கனிமொழி அவர்கள் ஏற்கனவே கூறியிருந்தார்.

சென்னையில் நாளை(அக்டேபர்14) நடைபெறும் திமுக மகளிர் அணி மாநாட்டில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி புதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் சுப்ரியா சுலே மற்றும் பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிலையில் திமுக மகளிர் அணி நடத்தும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி அவர்கள் 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வருகை தரவுள்ளார். இன்று(அக்டோபர்13) இரவு சென்னை விமான நிலையத்துக்கு வருகை தரும் சோனியா காந்தி அவர்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் விமான நிலையம் சென்று வரவேற்கவுள்ளார்.

மாநாட்டில் கலந்து கொண்டு முடிந்த பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சானியா காந்தி அவர்களை சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பில் தமிழ்நாடு அரசியல் நிலவரம், தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

Previous articleதீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வகை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டுள்ள அட்டகாசமான அறிவிப்பு!!
Next article82 வயது மனைவியை விவாகரத்து செய்ய மனு அளித்த  89 வயது கணவர்!!! அதிர்ச்சி கொடுத்த சுப்ரீம் கோர்ட்!!!