மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!! 

Photo of author

By Amutha

மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!! 

Amutha

Son's funeral!! Tragedy caused by father's cruel act!!

மகனின் இறுதிச் சடங்கு!! தந்தை செய்த  கொடூர காரியத்தால் நேர்ந்த விபரீதம்!! 

மகனின் இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது தந்தை திடீரென செய்த காரியத்தால் 13 பேர் உயிரிழந்தனர்.

காங்கோ நாட்டில் உள்ள நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. இவர் கடற்படை வீரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவரது மகன் திடீரென இறந்து விட்டார்.இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் அவரது வீட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

இந்த இறுதி சடங்கில் முகுவாவின் உறவினர்கள் மற்றும் ஏராளமான நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த முகுவா  தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து மகனின் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் மீது சரமாரியாக சுடத் தொடங்கினார்.

திடீரென சுட்டதால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிருக்கு பயந்து நாலா திசைகளிலும் தெறித்து ஓடினர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒன்பது குழந்தைகள் உட்பட 13 பேர் குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். முகுவா ஏன் இந்த செயலில் ஈடுபட்டார் என இதுவரை தெரியவில்லை. இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சொந்த மகனின் இறுதிச்சடங்கில் தந்தை செய்த இந்த அதிர்ச்சிகரமான காரியத்தால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.