மது பிரியர்களுக்கு கசப்பான செய்தி! டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி ஆணை!
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரு லட்சத்து 9 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். மூலம் நடத்தப்பட்ட கொரோனா ஆய்வில், இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 10,941 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் அனைத்தும் வேறு வழியின்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், மதுக்கடைகளுக்கு கூட்டம் அலை மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மதுக்கடைகளுக்கும், மது விற்பனைக்கும் புதிய கட்டுப்பாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் விதித்துள்ளது. அதன்படி, நண்பகல் 12 மணியில் இருந்து இரவு 9 மணி வரை மது விற்பனை நடைபெறும்.
அதே நேரத்தில், டோக்கன் முறையில் மது பிரியர்களுக்கு மது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என்றும், இதன் மூலம் கூட்டம் கூடுவதை தடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மணிக்கு தொடங்கும் டோக்கன் வழங்கும் முறை, 4 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே போன்று டோக்கன் முறை மூலம் மது விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.