இந்தியா வந்தடைந்தது அதிநவீன ஏர் இந்தியா ஒன் விமானம் !!

Photo of author

By Parthipan K

அமெரிக்க அதிபர் பயணிக்கும் போனஸ் ஒன் விமானத்திற்கு இணையான விமானம் இந்தியா வந்தடைந்துள்ளது.

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ,பிரதமர் மற்றும் விவிஐபிகள் பயணிக்க அதி நவீன அம்சங்களை கொண்ட ஏர் இந்தியா ஒன்று என்ற விமானம் வழங்கப்பட்டுள்ளது.ஏர் போர்ஸ் ஒன் என்ற விமானமானது, உலகிலேயே மிகவும் பாதுகாப்பாகவும், ஊடுருவ முடியாததாகவும் இருந்து வந்தது.

அமெரிக்கா அதிபர் பயணிக்கும் அந்த விமானம் போலவே, தற்பொழுது உருவாக்கப்பட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்ட விமானம் இந்தியாவிற்கு வழங்க போயிங் நிறுவனத்துடன் 8,400 கோடி செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இரு விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து உள்ள நிலையில், முதலாவது விமானம் தற்போது தயாராகி இந்தியா வந்தடைந்துள்ளது.

இந்தியாவுக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஏர்-இந்தியா ஒன்று விமானம் போயிங் 777 வகையை சேர்ந்ததாகும்.

இந்த விமானத்தில் கான்ஃபரன்ஸ் ஹால், தங்கும் அறை ,சமையலறை பாதுகாப்பு தளம் ,மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரேடார் (RADAR) கருவிகளை தென்படாமல் மறைக்கும் வசதியும் ஏவுகணை தாக்குதலை முறியடிக்கும் வசதியும் இந்த விமானம் கொண்டுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.