தொண்டை பகுதியில் பாக்டீரியாக்கள் தேங்கி இருந்தால் புண்கள் உருவாகி வலியை அனுபவிக்க நேரிடும்.நாள்பட்ட ஜலதோஷம்,காய்ச்சல்,தொடர் இருமல் காரணமாக தொண்டை புண் ஏற்படுகிறது.அதேபோல் வாதம்,கபம் போன்றவற்றாலும் தொண்டை புண் பாதிப்பு ஏற்படுகிறது.
தொண்டை புண் இருந்தால் எச்சில் விழுங்கும் பொழுது வலி உண்டாகும்.அதேபோல் உணவு உட்கொள்வதில் மிகுந்த சிரமத்தை சந்திக்க நேரிடும்.சில சமயம் பேசும் பொழுது கூட வலி ஏற்படும்.இந்த தொண்டை புண் பாதிப்பில் இருந்து மீள கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆயுர்வேத வைத்தியத்தை தொடர்ந்து பயன்படுத்துங்கள்.
1)கல் உப்பு + தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெது வெதுப்பான பக்குவத்திற்கு சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.அடுத்து அதில் கல் உப்பு சிறிதளவு சேர்த்து கரைத்து தொண்டையில் படும்படி வாய் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகும்.
2)சின்ன வெங்காயம்
தொண்டை புண் பாதிப்பு இருப்பவர்கள் ஒரு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு வாயில் போட்டு நன்கு மென்று விழுங்கினால் புண் ஆறும்.
3)துளசி பானம்
பாத்திரத்தில் கால் கைப்பிடி துளசி இலைகள் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுண்டக் காய்ச்சி பருகினால் தொண்டைப்புண் குணமாகும்.
4)அதிமதுரம்
ஒரு கிளாஸ் அளவு தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அதிமதுரப் பொடி சேர்த்து கொதிக்க வைத்து பருகினால் தொண்டை புண் குணமாகும்.
5)மஞ்சள் பானம்
ஒரு கிளாஸ் தண்ணீரில் கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தொண்டை புண் குணமாகும்.
6)தேன்
வெது வெதுப்பான தண்ணீரில் சிறிதளவு தேன் கலந்து பருகினால் தொண்டை புண் பாதிப்பு குணமாகும்.
7)மிளகு பால்
ஒரு கிளாஸ் பசும் பாலை சுண்டக் காய்ச்சி இரண்டு மிளகு தட்டி போட்டு குடித்தால் தொண்டை புண் குணமாகும்.
8)எலுமிச்சை பானம்
ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு பிழிந்து பருகினால் தொண்டை புண் குணமாகும்.