தொடர் இருமலால் தொண்டையில் புண் வந்துவிட்டதா? இதை ஆற்றும் சிறந்த பாட்டி வைத்திய குறிப்பு இதோ!!

0
79

தற்பொழுது குளிர்காலம் தொடங்கிவிட்ட நிலையில் சளி,இருமல் போன்ற நோய் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.தொடர் இருமலால் தொண்டைப் பகுதியில் புண் உருவாகி அரிப்பு,எரிச்சல் ஏற்படுகிறது.

 

தொண்டைப் புண் குணமாக உதவும் வீட்டு வைத்தியம்:

 

தீர்வு 01:

 

1)சுக்கு

2)மிளகு

3)திப்பிலி

4)ஏலக்காய்

5)தேன்

 

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கிவிட்டு இடித்து பொடியாக்கி கொள்ளுங்கள்.அடுத்து அதில் 10 கருப்பு மிளகு,2 திப்பிலி மற்றும் ஒரு ஏலக்காயை உரலில் போட்டு இடித்து தூளாக்கி கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிண்ணம் எடுத்து இடித்த பொருட்களை சேர்த்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.

 

தீர்வு 02:

 

1)சித்தரத்தை

2)மிளகு

3)துளசி இலை

 

ஒரு சித்தரத்தை மற்றும் 10 மிளகை ஒன்றாக இடித்து தூளாக்கி கொள்ளுங்கள்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

 

அடுத்து 10 துளசி இலையை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.பிறகு இடித்த பொருட்களை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.

 

தீர்வு 03:

 

1)கரு மிளகு – கால் தேக்கரண்டி

2)தேன் – ஒரு தேக்கரண்டி

 

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு தேக்கரண்டி கரு மிளகு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை ஆறவிட்டு மிக்சர் ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளுங்கள்.பிறகு இதில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.

 

தீர்வு 04:

 

1)கல் உப்பு – ஒரு தேக்கரண்டி

2)தண்ணீர் – ஒரு கப்

 

பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து வாய் கொப்பளித்து வந்தால் தொண்டைப்புண் குணமாகும்.

 

தீர்வு 05:

 

1)பேக்கிங் சோடா – ஒரு தேக்கரண்டி

2)தண்ணீர் – ஒரு கப்

 

பாத்திரம் ஒன்றில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்திக் கொள்ளுங்கள்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி சோடா உப்பு சேர்த்து வாயை கொப்பளித்து வந்தால் தொண்டைப் புண் குணமாகும்.

 

தீர்வு 06:

 

1)தேன் – ஒரு தேக்கரண்டி

2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

 

அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பருகினால் தொண்டைப் புண் குணமாகும்.

Previous articleதெரிந்து கொள்ளுங்கள்! சின்ன வெங்காயத் தோல் எந்த நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது தெரியுமா?
Next articleஉண்மையில் ஆண்டாள் திருக்கோயிலில் நடந்தவை இதுதான்!! விளக்கும் இளையராஜா மற்றும் ஜூயர்கள்!!