கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

0
128

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இதனையடுத்து கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அரசிற்கு உதவும் விதமாக கொரோனா சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் தங்கும் அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் கங்குலி் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கமானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் தற்போது வரை இந்தியா முழுவதும் இந்த கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 600 க்கு அருகில் நெருங்குகிறது. இதனையடுத்து இன்னும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுவதால் ஒவ்வொரு மாநில அரசுகளும் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு ஏற்ற வகையில் மருத்துவமனையில் உள்ள படுக்கைகளை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில் மேற்கு வங்காளத்திலும் இந்த கொடிய கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இங்கு ஒருவேளை சிகிக்சை அளிக்க இடம் தேவை என்றால் ஈடன் கார்டன் மைதானத்தில் கிரிக்கெட் வீரர்கள் தங்குவதற்காக கட்டப்பட்டுள்ள அறைகளை வழங்க தயாராக இருக்கிறோம் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘கொரோனா சிகிச்சைக்காக அரசு எங்களிடம் கேட்டால், நாங்கள் கொடுப்பதற்காக தயாராக உள்ளோம். இந்த நேரத்திலிருந்து எது தேவையென்றாலும் அதை செய்ய இருக்கிறோம். இதில் எந்தவித பிரச்சனையும் இல்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.

சவுரவ் கங்கலி தற்போது பதவி வகித்து வரும் பிசிசிஐ தலைவராக பதவி ஏற்பதற்கு முன் பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ஏற்கனவே புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கமும் கொரோனா சிகிச்சைக்காக இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous articleகொரோனா தடுப்பு பணிக்கு முதல் நபராக அன்புமணி ராமதாஸ் ரூ. 3 கோடி நிதியுதவி
Next articleசாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது வழக்கு பாய்ந்தது : காவல்துறை அதிரடி நடவடிக்கை!