கொரோனா தடுப்பு மருந்து குறித்து தென் ஆப்பிரிக்கா அறிவித்த அதிரடி அறிவிப்பு!

0
131

கொரோனா தடுப்பு மருந்தை சீரம் இந்தியா நிறுவனத்திடமிருந்து தென் ஆப்பிரிக்கா ஆடர் செய்து பல லட்சம் டோஸ்களை பெற்றுள்ளது. அந்த தடுப்பு மருந்துகளை அந்நாட்டு மக்களுக்கு உபயோகித்துள்ளது தென் ஆப்பிரிக்கா.

தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் வெகுவாக பரவி வருவதால் அதை எதிர்த்து பலகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்த அஸ்ட்ராஜெனகா தடுப்பு மருந்து புதிதாக உருவெடுத்துள்ள உருமாறிய கொரோனா வைரஸை எதிர்ப்பதில் பயனளிக்கவில்லை.

அதனால் பல லட்சம் டோஸ்களை சீரம் இந்தியா நிறுவனத்திற்கு திருப்பி அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது இந்த தகவல் பொய்யானது என்று அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் மறுப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமின்றி தென்னாபிரிக்கா தனது நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்துகளை யூனியனிடமிருந்து மட்டுமே பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இன்று முதல் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தை உபயோகிக்க இருப்பதாக திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Previous articleபுஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!
Next articleமுன்னாள் முதல்வர் ஜெ பிறந்த நாள்! 73 வகை சீர் வரிசையுடன் நடைபெற்ற பிரம்மாண்ட திருமணங்கள்!