தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி

Photo of author

By Parthipan K

உலக்கோப்பை குருப் லீக் சுற்றுகள் ஏறகனவே முடிந்த நிலையில், குருப் 12 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

இதனையடுத்து இன்று மாலை 3.30க்கு நடைபெற்ற ஆட்டத்தில் மேற்கிந்நிய தீவுகள் அணியும் தென்னாப்பிரிக்கா அணியும் பலப்பரீட்சை நடத்தின.

இதில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச முடிவு செய்தது. இதனையடுத்து பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி தென் ஆப்பிரிக்க அணியின் வலுவான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளிய் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவிர் 8 விக்கெட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகப்பட்சமாக எவின் லீவிஸ் 56 ரன்களும், கிரன் பொல்லார்டு 26 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணியில் பிரெட்டோரியஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அபாரமாக பந்து வீசிய நார்த்ஜே 4 ஓவர்களுக்கு 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர், 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்க அணியில், கேப்டன் பவுமா முதல் ஓவரிலேயே ரன்அவுட் ஆகி 3 ரன்களுடன் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்றிடிக்ஸ் மற்றும் வான்டெர் டூசன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பின்னர் 39 ரன்களுக்கு ஹென்ட்ரிடிக்ஸ் ஆட்டமிழக்க, அடுத்து வந்த எய்டன் மாக்ரம் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் 144 ரன்களை 18.2 ஓவர்களில் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தென் ஆப்பிரிக்க அணி. எய்டன் மாக்ரம் 51 ரன்களுடனும், வான்டெர் டீசன் 43 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அபாரமாக பந்து வீசி 4 ஓவர்களுக்கு 14 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட் வீழ்த்திய நார்த்ஜே ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப் பட்டார்