திடீரென குடிப்பழக்கத்தை விட்ட தென் கொரியா மக்கள்!! இதுதான் காரணமா??

Photo of author

By Vinoth

தென் கொரியவில் கடந்த காலத்தில் இரவு நேர பப்க்கள் மற்றும் மதுபான விடுதிகளில் இரவு முழுவதும் மக்கள் நெருக்கடி அதிகமாக இருந்த நிலையில் தற்போது அங்கு சாலை வெறிச்சோடி இருப்பதை பார்க்க முடிகிறது. தென் கொரியா தலைநகர் சியோலில் முன்பை போல தற்போது இரவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தெருக்கள் வெறிச்சோடி இருப்பதாய் கூறுகின்றனர்.

இதற்க்கு காரணம் பல்வேறு புள்ளி விவரம் மூலம் தெளிவுபடுத்தபடுகிறது. சியோலில் பப் நடத்தும் உரிமையாளர் ஜுன் ஜங்-சூக் கூறுகையில், சியோலின் ஒரு காலத்தில் துடிப்பான நோக்டு தெருவில் மக்கள் வேலையை முடித்து வந்து இரவில் நியான் விளக்குகள் எரியும் தெருக்களில் உள்ள விடுதிகளும் மக்ஜியோல்லி [அரிசி மது] உள்ளிட்ட மது வகைகள் இல்லாமல் தங்கள் நாளை முடிக்க மாட்டார்கள். பாப் – பப் விடுதிகள் நிரம்பி வழியும். மேசைக்கு மக்கள் வரிசையில் நிற்பதைக் காணலாம். ஆனால் இப்போது அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன.

அந்த நிலைமை முழுவதும் மாறிவிட்டது என கூறினார். மேலும் அங்குள்ள மக்கள் மதுவை கைவிடுவதற்கு மிக பெரிய காரணம் தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள நீண்டகால பணவீக்கம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கடன் நிறுவனங்கள் அருகி இருக்கும் தென் கொரியாவில் பெரும்பான்மையோர் கடனாளிகளாக மாறியிருப்பதும் வட்டி விகிதங்கள் அதிகரித்தன் காரணமாகவும் மக்கள் தங்கள் பணப் பையைத் திறந்து செலவு செய்யத் தயக்கம் காட்டுகின்றனர்.