தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

0
324
Southern Railway announced! Extension of special trains going here booking starts from today!
Southern Railway announced! Extension of special trains going here booking starts from today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இங்கு செல்லும் சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு முதல் தான் அனைத்து பகுதிகளுக்கும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதற்காகவும் மக்கள் அனைவரும் அவரவர்களின்  சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் எர்ணாகுளம், வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில் சேவை பிப்ரவரி 25ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து கொல்லம், தென்காசி, விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, பட்டுக்கோட்டை வழியாக வேளாங்கண்ணி சென்றடையும்.

எர்ணாகுளத்தில் இருந்து பிப்ரவரி 4,11,18,25 போன்ற தேதிகளில் சனிக்கிழமை தோறும் மதியம் 1.10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து 5,12, 19, 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை 6:40 மணிக்கு புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும். மேலும் இந்த ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்கியுள்ளது.

Previous articleபொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்!
Next articleவாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்?