பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்!

0
132
For the attention of the students writing the public examination! Today is the last day to pay immediately!
For the attention of the students writing the public examination! Today is the last day to pay immediately!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! இன்றே இறுதி நாள் உடனே கட்டணம் செலுத்த வேண்டும்!

கொரோனா பரவல் குறைந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது.மேலும் ஜனவரி 2ஆம் தேதி தான் விடுமுறைகள் முடிந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

பொதுத்தேர்வில் எழுத்து தேர்வுகள் மார்ச் மாதத்தில் தொடங்கினாலும், செய்முறை தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. அதற்கு ஹால் டிக்கெட் என்பது முக்கியம். அதனால் ஹால் டிக்கெட் வழங்கக்கூடிய பணியை வேகமாக செய்ய வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டது.அந்த வகையில் அரசு தேர்வுகள் இயக்கம் www.dge1.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களுக்கு என கொடுக்கப்பட்டுள்ள யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்நிலையில் தமிழ் பயிற்று மொழியாக கொண்டு பொது தேர்வு எழுதும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டது.இவர்களை தவிர மற்ற மாணவர்களிடம் தேர்வு கட்டணத்தை வசூல் செய்து இன்றுக்குள் ஆன்லைன் வழியாக அரசு தேர்வு துறைக்கு செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. செய்முறை தேர்விற்கு ரூ225 மற்றவைகளுக்கு ரூ175 கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K