தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்!

0
223
Southern Railway announced! Timings change in train service!
Southern Railway announced! Timings change in train service!

தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! ரயில் சேவையில் நேரங்கள் மாற்றம்!

தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் பராமரிப்பு பணிகள் காரணமாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முதலாவதாக வண்டி எண் 20691  தாம்பரம் மற்றும்  நாகர்கோவில் இடையே இரவு 11மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.மருமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் இடையே மதியம் 3.50 மணிக்கு புறப்படும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் நாளை நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.

மேலும் இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து இரவு 9.05 மணிக்கு இயக்கப்படும்.அதனையடுத்து வண்டி எண் 06662 செங்கோட்டையில் இருந்து மதுரை இடையே காலை 7மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை விருதுநகர் மற்றும் மதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.வண்டி எண் மதுரையிலிருந்து செங்கோட்டை இடையே மாலை 5.1மணிக்கு புறப்பட்டு எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை மதுரை மற்றும் விருதுநகர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மேலும் இந்த ரயில் விருதுநகரில் இருந்து மாலை 6.10மணிக்கு இயக்கப்படும்.இதனை தொடர்ந்து வண்டி எண் 16321நாகர்கோவிலில் இருந்து கோவை இடியே காலை 7.35மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை நாகர்கோவில் மற்றும் திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது.இந்த ரயில் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 1.25மணிக்கு புறப்பட்டு செல்லும்.அதன் பிறகு மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து நாகர்கோவில் இடையே காலை 8 மணிக்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நாளை திண்டுக்கல் மற்றும் நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅமலாக்கத்துறையின் அதிரடி வேட்டை! இந்த நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்!
Next articleஇன்ஸ்டாகிராம் மூலமாக வருமானம்… கோலி சம்பாதித்தது இத்தனைக் கோடிகளா?