தமிழ்நாட்டில் தற்போது நாளுக்கு நாள் வன்முறை பெருகி வருகிறது. காவல்துறை மற்றும் திமுக கட்சியை சேர்த்த நபர்கள் செய்யும் தில்லுமுல்லு விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இத்தனை நாட்களாக முடி மறைக்கப்பட்டு சட்டத்திற்கு புறம்பாக நடந்த விஷயங்கள் எல்லாம் தற்போது வெட்ட வெளிச்சமாக மக்களுக்கு தெரிய ஆரம்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அஜித்குமார் லாக் அப் மரணத்தில் தமிழக அரசு மீதும், காவல் துறை மீதும் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அந்த பிரச்சனையே இன்னும் முடியாத நேரத்தில் அடுத்த பிரச்சனை தற்போது ஆரம்பித்துள்ளது. அதாவது விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலை வெடிவிபத்தின் போது 8 பேர் பலியான நிலையில் அவர்களுக்கு நிவாரணம் கேட்பதற்காக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் அந்த போராட்டத்தை கலைக்க முயற்சி செய்த எஸ்.பி. ஒழுங்கா இருக்கணும், இல்லைனா வேற மாதிரி ஆகிடும் என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். இதுபற்றி அறிந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை மற்றும் தமிழக அரசை வன்மையாக கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வேற மாதிரி ஆகிடும்னா எப்படி? மடப்புரம் அஜித்குமார் மாதிரியா? மக்களை மிரட்டவும், அச்சுறுத்தவும் மட்டும் ஸ்டாலின் அரசின் குரல்கள் உயர்கின்றதா? சட்டத்தை மீறி செயல்படும் அனைத்து நடவடிக்கைகளையும் இந்த ஸ்டாலின் மாடல் அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று கண்டித்துள்ளார் எடப்பாடிபழனிசாமி.