முதல்வரின் ராஜதந்திரம்! கைதாகிறாரா முன்னாள் அமைச்சர்?

0
167

அதிமுகவைச் சார்ந்தவர்களும், திமுகவைச் சார்ந்தவர்களும், ஒருவரை ஒருவர் குற்றம்சாட்ட கடந்த ஆட்சிக்காலத்தில் சென்னையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரிவர செயல்படவில்லை. இதனால் விசாரணை ஆணையம் அமைத்து அந்த துறை அமைச்சராக பதவி வகித்த எஸ் பி வேலுமணி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இதற்கு இடையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுக கொறடாவும் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சருமான வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டது. இந்த சூழ்நிலையில், தன்னை பழிவாங்கும் நோக்கத்தில் தான் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்று வேலுமணி பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.

நேற்றைய தினம் கோயம்புத்தூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த வேலுமணி வாக்களித்த மக்களுக்கும், வாக்களிக்காத மக்களுக்கும், நடுநிலையாக தான் செயல்படுவேன் என்று கூறினார் முதலமைச்சர் ஆனால் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை தற்போது தெரிவிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

கோயமுத்தூர் மாநகரில் 300 பகுதிகளில் சாலைகளை சீரமைக்கும் வணிக ஒப்பந்தங்களை மாநகராட்சி ரத்து செய்திருக்கிறது மழைக்காலத்தில் பொதுமக்கள் சிரமப்படும் நிலையில், சமீபத்தில் கோயமுத்தூர் வந்த முதலமைச்சர் இன்று காலை களையெல்லாம் சரி செய்ய உத்தரவிடுவார் என்று நம்பிக்கையுடன் இருந்தோம் ஆனால் எந்த விதமான உத்தரவும் வரவில்லை. திமுக ஆட்சி அமைந்து இருக்கின்ற சூழ்நிலையில், அவர் எதுவும் செய்யாமல் எதற்கெடுத்தாலும் அதிமுகவை குற்றம் சாட்டிக் கொண்டு இருக்கிறார் என ஆதங்கம் தெரிவித்திருக்கிறார் முன்னால் அமைச்சர் வேலுமணி.

தலைநகர் சென்னையில் வெள்ளத்திற்கு பின்னர் மழைநீர் வடிகால் பணிகள் முன்னெடுக்கப்பட்டன சுமார் 1800 கோடி திட்டங்கள் முடித்து வைக்கப்பட்டன மீதம் இருக்கக்கூடிய 4 ஆயிரம் கோடி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இவர்கள்தான் ஒப்பந்தப்புள்ளிகள் அமைக்க வேண்டும் இவர்கள்தான் அதற்கான தொகையை விடுவித்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார்.

இருந்தாலும் ஒட்டுமொத்தமாக ஊழல் என்று தெரிவிக்கிறார்கள் 20 முதல் 25 சதவீத பணிகளை முடித்து இருக்கின்றோம். மீதம் இருக்கக்கூடிய பணிகளை அவர்கள் முடிக்க வேண்டும் தியாகராயநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பொருத்தவரையில் அந்த திட்டம் ஆரம்பித்து மூன்று ஆண்டுகள் ஆகின்றது. கடந்த முறை அதிகமான மழை வந்த சமயத்திலும் கூட அங்கே தண்ணீர் தேங்கவில்லை ஆனாலும் தற்சமயம் முறையாக தூர்வாராததன் காரணமாக, மழைநீர் அங்கே பல பகுதிகளில் தேங்கி நிற்கின்றது. நாங்கள் முன்னெடுத்த சீரமைப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தற்சமயம் 67 பகுதிகளில் மட்டுமே தண்ணீர் தேங்கி இருக்கின்றது என கூறியிருக்கிறார்.

சூழ்நிலை இவ்வாறு இருக்கும்போது எதற்கெடுத்தாலும் முதலமைச்சருக்கு குறை சொல்ல வேண்டும் அதிலும் குறிப்பாக என் மீது பழி சுமத்த வேண்டும் என்பதை இலக்காக இருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த சமயத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை காப்பாற்றுவதற்கு தொடர்ந்து ஆட்சியில் இருப்பதற்கு முக்கிய காரணமாக நான் இருந்ததன் காரணமாக, ஆட்சி மாற்றம் ஏற்படவில்லை, அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்றது. அதன் காரணமாக தான் முதலமைச்சருக்கு தற்போது என் மீது தீராத பகை உணர்வு இருந்து வருகிறது. தற்சமயம் கோயம்புத்தூரில் 10 தொகுதியிலும் வெற்றி பெற்றுவிட்டோம். இந்த சூழ்நிலையில் தமிழக அரசால் கோயமுத்தூர் புறக்கணிக்கப்படுகிறது என்று வருத்தமாக இருக்கிறது என கூறியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் வேலுமணி.

அத்துடன் பழிவாங்கும் நோக்கத்தில் பல முன்னாள் அமைச்சர்கள் இல்லங்களில் சோதனை நடத்தினார் முதலமைச்சர் எனக்கு தொடர்பு இருக்கின்ற 60 பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. இதுவரையில் என்னைச் சார்ந்த இருவரை தினசரி அழைத்து விசாரணை செய்து வருகிறார்கள்.

என்னுடைய இல்லத்திற்கு சோதனை செய்ய வந்த சமயத்தில் நான் சென்னையில் இருந்தேன் உடல்நிலை சரியில்லாமல் படுத்திருந்த என் தாயாரின் அறையில் சோதனை செய்து தொந்தரவு செய்து இருக்கிறார்கள். தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்த என் மகள் , உதவியாளர் என்று அனைவருக்கும் தொந்தரவு கொடுத்து இருக்கிறார்கள் என் மீது போடப்படும் வழக்குகளை நான் சட்டப்படி எதிர் கொள்வதற்கு தயாராக இருக்கிறேன்.

தற்சமயம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் நான் வெளியே இருக்கக் கூடாது என் மீது ஏதாவது ஒரு வழக்கை பதிவு செய்து என்னை கைது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவு போட்டு இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்தது. நான் அரசியலில் இருக்கவே கூடாது என்று நினைக்கிறார் முதலமைச்சர் என தெரிவித்திருக்கிறார் வேலுமணி.

அதோடு மட்டுமல்லாமல் விமர்சனம் செய்கின்றார் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை கொடநாடு வழக்கில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள். ராஜேந்திரபாலாஜி, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர், உள்ளிட்ட அனைவரின் மீதும் வழக்கு போடுகிறார்கள் என்று முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக முன்வைத்து இருக்கிறார் முன்னாள் அமைச்சர் வேலுமணி

இந்த 300 சாலைப் பணிகளை முன்னெடுக்கா விட்டால் ஒருவாரத்தில் அதிமுக சார்பாக மிகப்பெரிய கண்டன போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

சட்டசபை தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கோயம்புத்தூரை கைப்பற்றுவதற்கு திமுக முயற்சி செய்தது என்பதும், அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் கோயமுத்தூர் மாவட்டத்தில் கொங்கு மண்டலத்தையும், நோட்டமிட்டு வந்தார்கள் என்பதும், குறிப்பிடத்தக்கது. ஆனால் திமுகவினரின் முயற்சி எள்ளளவும் கோயமுத்தூர் மாவட்டத்தில் பலிக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இதனை அறிந்து கொண்ட முதலமைச்சர் அந்த மாவட்டத்தில் அதிமுகவின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கக்கூடிய முன்னாள் அமைச்சர் வேலுமணியை எப்படியாவது, ஏதாவது ஒரு வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என்று பல முறையில் முயற்சி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleடிசம்பரில் தான் கண்டிப்பாக விலை குறையும்! மத்திய அரசு பகீர் தகவல்!
Next articleகொரோனாவையே மிஞ்சும் புதிய வைரஸ்! அலரும் உலக நாடுகள்!