எதிர்வரும் 13ஆம் தேதி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 21ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்னர் ஆட்சிக்கு வந்திருக்கின்ற திமுக அரசு விரிவான பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறது 2021 மற்றும் 22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய தமிழக அரசு தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது தமிழ்நாட்டின் முதல் முறையாக வேளாண் துறைக்கு என தனி நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட இருக்கிறது என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் எதிர்வரும் 14ஆம் தேதி அதாவது பட்ஜெட் தாக்கல் செய்த அடுத்த தினம் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
அந்த பட்ஜெட் மீது விவாதங்கள் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் நடைபெறும் நான்காவது தினம் வாதம் முடிந்த பின்னர் நிதி அமைச்சர் அவர்களும், வேளாண்மைத்துறை அமைச்சர் அவர்களும் ,பதிலுரை அளித்த பின்னர் சட்டசபை முடிவுக்கு வருகிறது என்று தெரிவித்திருக்கிறார் சபாநாயகர்.அத்துடன் அதன் பிறகு 23ஆம் தேதி முதல் ஒரு மானிய கோரிக்கையானது தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி வரையில் பொது மானியக் கோரிக்கையை அமைச்சர்கள் தாக்கல் செய்ய இருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார் சபாநாயகர்.
இதற்கான விவாதங்கள் நடத்தப்பட்டு தமிழக அமைச்சர்கள் பதிலுரை உடன் நிறைவு பெற இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இருபத்தி மூன்று தினங்கள் பொது மானியக்கோரிக்கை அவரை நடக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியிருக்கிறார். சபாநாயகர் அப்பாவு. அத்துடன் தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக காகிதங்கள் இல்லாத விதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும், அப்பாவு தெரிவித்திருக்கிறார். அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் கணினியின் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும், தெரிவித்திருக்கிறார் அப்பாவு.