வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் அமைப்பு !! தமிழக அரசு !!

Photo of author

By Parthipan K

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க , வாக்களிக்கும் பள்ளிகளுக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான சிறப்பு முகாம் அந்தந்த பள்ளிகளில் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் தங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு சென்று படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் வழங்க வேண்டும்.

சிறப்பு முகாம் நடைபெறும் தேதி விபரங்கள் குறித்து தமிழ்நாடு சிறப்பு முகாம் வெளியிட்டுள்ளது. நவம்பர் மாதத்தில் 21,22,28 மற்றும் 29-ஆம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் மாதத்தில் 5, 6,12 மற்றும் 13 -ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் 18 வயது நிரம்பியவர்கள் ,தங்களது விவரங்களை கொடுத்து விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளனர்.