மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

Photo of author

By Divya

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்! விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு!!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று திரு.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் வெற்றி பெற்று 2 ஆண்டுகளுக்கு பின் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி ‘அறிஞர் அண்ணா’ பிறந்த நாளன்று இத்திட்டம் செயல்பாட்டிற்கு வர இருக்கின்றது.

இதற்காக இரண்டு கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில் முதற்கட்ட முகாமை கடந்த ஜூலை மாதம் 24 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி இந்த முகாம் நிறைவு பெற்ற நிலையில் 88 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பயனாளர்களிடமிருந்து பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் இரண்டாம் கட்ட முகாம் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை நடைபெற்றது.இதில் 59 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பயனாளர்களிடமிருந்து பெறப்பட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில் ரூ.1000 பெறுவதற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் மற்றும் விடுபட்டு போன நபர்களுக்கு இன்று முதல் வருகின்ற 20 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.