+2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்!! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
+2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8ம் தேதி வெளியானது. இந்த பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்நிலையில் +2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்கு வரும் ஜூன் 19 முதல் ஜூன் 26 துணைத்தேர்வு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்களும் விண்ணப்பித்து இந்த துணைத்தேர்வில் கலந்து கொள்ளலாம் என்றும் இதனால் வரும் கல்வியாண்டிலேயே மேற்படிப்பு படிக்க முடியும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், அவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே இன்று மே 15ம் முதல் மே 17ம் தேதி வரை சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. எனவே மாணவர்கள் இந்த சிறப்பு வகுப்புகளை பயன்படுத்தி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் தமிழக அரசு உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மேற்படிப்பிற்கான ஆலோசனைகளும், தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இந்த துனைத்தேர்வுக்கான விளக்கங்களை அளித்து, தேர்வில் வெற்றி பெற ஆலோசனை வழங்குகிறது. இந்த உதவி மையத்தையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.