அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்த அரசு!!

0
164
#image_title
அரசு ஊழியர்களின் கவனத்திற்கு! முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்த அரசு!
அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்பை அரசு தெரிவித்துள்ளது. அதாவது அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுக்கான சிறப்பு தேர்வுகள் எழுதுவதற்கு விலக்கு பெறுவதற்கான வயதை அதிகரித்து அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொதுமக்களுக்கும் சரி அரசு ஊழியர்களுக்கும் சரி பல நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில் அரசு ஊழியர்கள் துறை மற்றும் சிறப்பு தேர்வுகள் எழுதுவதில் விலக்கு பெறுவதற்கான வயதை 53லிருந்து 55ஆக அதிகரித்துள்ளது.
பதவி உயர்வு, கூடுதல் பணக்கொடை போன்ற பல காரணங்களுக்காக அரசு ஊழியர்களுக்கு இந்த சிறப்பு தேர்வுகள் நடத்தப்படுகிறது. தற்போது அந்த சிறப்புத் தேர்வுக்கான வயதுதான் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு தேர்வை எழுத விருப்பம் இல்லாத அரசு ஊழியர்கள் இதில் இருந்து விலக்கு பெற்றுக் கொள்ளலாம். அந்த வகையில் இந்த சிறப்பு தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான வயதை 53லிருந்து 55ஆக அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதற்கான வயதை 58லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டுள்ளதால் சிறப்பு தேர்வுகளில் இருந்து விலக்கு பெறுவதற்கான வயதும் அதிகரிக்கப்பட்டுள்ளது.