ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு உரிமை!! ரயில்வே நிர்வாகம் அதிரடி!!

0
217
Special rights for women traveling in trains!! Railway administration action!!
Special rights for women traveling in trains!! Railway administration action!!

ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு சிறப்பு உரிமை!! ரயில்வே நிர்வாகம் அதிரடி!!

நம் நாட்டின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்று ரயில் போக்குவரத்து.தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.பாதுகாப்பான பயணம்,குறைவான பயணக் கட்டணம்,குடும்பத்துடன் பயணிக்க ஏதுவான போக்குவரத்து போன்ற பல காரணங்களுக்காக ரயில் பயணம் விரும்பப்படுகிறது.ரயிலில் பயணிப்பவர்களில் பெண் பயணிகளே அதிகம்.இந்திய ரயில்வே நிர்வாகம் பயணிகளின் பயணத்தை எளிமையாக்க பல அம்சங்களை அறிமுகப்படுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணம்.

அந்தவகையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிளின் பாதுகாப்பை மேம்படுத்த ரயில்வே நிர்வாகம் வகுத்துள்ள சிறப்பு விதிகளை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.

1)எக்ஸ்பிரஸ் ரயில்களில் பெண் பயணிகளுக்கு என்று தனி பெட்டியை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கி இருக்கிறது.இதனால் பெண்கள் பாதுகாப்புடன் பயணிக்க முடியும்.

2)இரவு நேர பயணத்தில் எதிர்பாராத விதமான பெண் பயணி டிக்கெட் எடுக்கவில்லை என்றால் அவரை ரயில்வே ஊழியர்கள் ரயிலில் இருந்து இறங்கச் செய்ய முடியாது.

3)ரயிலில் முன்பதிவுப் பெட்டிகளில் தனியாகப் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்த பெண் பாதுகாப்புப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டிருப்பர்.

4)முன்னதாக ரயில் நிலையத்திற்கு வந்த பெண்கள் பாதுகாப்பாக ஓய்வெடுக்க ரயில் நிலையங்களில் தனி காத்திருப்பு ஓய்வறைகள் உள்ளன.

5)ஒரு பெண் ரயில் பெட்டியில் தனியாக பயணிக்கிறார் என்றால் அவருக்கு அசௌகர்ய சூழல் ஏற்படும் பொழுது TTE-யிடம் தெரிவித்து வேறு இருக்கையை மாற்றிக் கொள்ள முடியும்.

Previous articleமக்களே உங்களுக்குத்தான்.. இனி வரும் நாட்களில் இந்த வங்கி செயல்படாது!! ரிசர்வ் வங்கி போட்ட திடீர் தடை!!
Next articleஜஸ்ட் Rs.1000 மட்டும் செலுத்தி Rs.14,00,000 பெறலாம்!! உடனே இந்த ஸ்கீமுக்கு விண்ணப்பியுங்கள்!!