உடல் எடையை குறைக்கும் உப்பு! அருமையான இயற்கை மருத்துவம்

Photo of author

By Kowsalya

உடல் எடையை குறைக்கும் உப்பு! அருமையான இயற்கை மருத்துவம்

Kowsalya

Table Salt for Body Weight Loss

உடல் எடையை குறைக்கும் உப்பு! அருமையான இயற்கை மருத்துவம்

குப்பைமேனியை பல கிராமங்களில் சாலையோரங்களில் பார்த்திருப்போம். குப்பைமேனி தோலில் உள்ள பிரச்சினைகளை தீர்க்கும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் குப்பைமேனியால் செய்யப்படும் உப்பு உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது என்று சொல்லப்படுகிறது அது எப்படி என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

1. முதலில் ஒரு வானொலி சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதில் குப்பைமேனி இலையை எடுத்து அரைத்து அரை லிட்டர் அளவு சாறு எடுத்து கொள்ளவும்.
3. அரை கிலோ கல் உப்பை அந்த சாற்றுடன் கலந்து அடுப்பில் வைத்து சிறுதீயில் காய்ச்சவும்.
4. சிறிது நேரம் கழித்து நீர் நன்றாக சுண்டி உப்பு படிவங்களாக கருப்பாய் படிய ஆரம்பிக்கும்.
5. இதனை எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக்கொள்ளவும்.
6. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது அரு மருந்தாக பயன்படுகின்றது.

குப்பைமேனி பயன்கள்
குப்பைமேனி பயன்கள்

7. உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஏதேனும் ஒரு கீரையுடன் எலுமிச்சம்பழ சாறை சேர்த்து தேவையான குப்பைமேனி உப்பை சேர்த்து காலை உணவாக கீரையை மட்டும் உண்டு வந்தால் இரண்டு மாதங்களுக்குள் அனைத்து கொழுப்பும் கரைந்து உடல் எடை சீராகும்.
8. இந்த உப்பை காய்கறி, மோர், தயிர் ஆகியவற்றை கூட பயன்படுத்தலாம்.
9. சாதத்திற்கு சேர்த்து சாப்பிடும் பொழுது உடல் மினுமினுப்பை அளிக்கிறது.
10. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வரும் வயிற்றுவலி இடுப்பு வலிக்கு இந்த உப்பை மோரில் கலந்து குடிக்க உடனடியாக குணமாகும்.