ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட கிரண்பேடி முதல்வர் வேட்பாளரா

0
185

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கின்ற அந்த மாநிலத்தின் முதலமைச்சர் நாராயணசாமி மக்களை சென்று சேர வேண்டிய பல நல்ல திட்டங்களை கிரண்பேடி தனித்து கொண்டு இருந்தார் எனவும், தற்சமயம் அவர் விடுவிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில், மக்களுக்கு நல்ல காலம் பிறந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார். எங்களுடைய பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது என்றும் இதற்கு நாங்கள் வரவேற்பு தெரிவிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையின் மூலமாக புதுச்சேரி மக்களின் உரிமை பாதுகாக்கப்பட்டு இருக்கிறது எனவும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் இப்பொழுது புதுச்சேரிக்கு ஆளுநராக தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரியையும் கவனித்து வருகிறார்.

அதேபோல தற்போது புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் சட்ட விதிமுறைப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புதுச்சேரியின் முதல்வர் நாராயணசாமி கேட்டுக் கொண்டிருக்கின்றார். கிரண் பேடியை பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தினால் அதை நாங்கள் வரவேற்போம் என்றும் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

Previous articleஆராய்ச்சியாளர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – அதிர்ச்சியில் நியூசிலாந்து மக்கள்!
Next articleஉடல் எடையை குறைக்கும் உப்பு! அருமையான இயற்கை மருத்துவம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here