சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் !

Photo of author

By Parthipan K

சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் !

Parthipan K

Special train services start! You can apply from this morning!

சிறப்பு ரயில் சேவைகள் தொடக்கம்! இன்று காலை முதல் விண்ணப்பிக்கலாம் !

சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கேரள மாநிலம்  கொச்சுவேலிருந்து  பெங்களூருக்கு செல்வதற்காக பையப்பனஹாள்ளி என்ற சிறப்பு ரயில் இன்று மாலை 5 மணிக்கு கொச்சுவேலி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொல்லம், காயங்குளம், மாவேலிக்கரை, செங்கனூர், திருவிழா, கோட்டயம், எர்ணாகுளம், அலுவா, திருச்சூர் பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக நாளை அதிகாலை நான்கு முப்பது மணி அளவில் சேலம் வந்தடையும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் சேலத்தில்லிருந்து நான்கு 33 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக நாளை மறுநாள் காலை 10   மணி அளவில் பெங்களூரு  பையப்பனஹள்ளி ரயில் நிலையம் சென்றடையும் எனவும் தெரிய வருகிறது.. மேலும் மறு மார்க்கத்தில் பெங்களூரில் இருந்து கொச்சுவேலி சிறப்பு ரயில் பெங்களூர் ரயில் நிலையத்தில் இருந்து நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை ,கிருஷ்ணராஜபுரம் வழியாக 7 5 மணி அளவில் சேலம் வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது, மேலும் சேலத்தில் இருந்து 7.08 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். மேலும் இந்த ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது எனவும் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.