தமிழகத்திற்கு சிறப்பு ரயில்கள் அனுமதி!! தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
நாட்டில் பேருந்து போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து என பல இருந்தாலும் மக்கள் நீண்ட தூர பயணங்களுக்காக ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர்.
பேருந்து போக்குவரத்து பல இருந்தாலும் ரயில் பயணத்தையே மக்கள் சௌகரியமாக உணர்கின்றனர். தினமும் பள்ளிக்கு செல்பவர்கள், கல்லூரிக்கு செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், வெளியூருக்கு பயணம் செல்பவர்கள் என அனைவரும் பெரும்பாலும் இந்த ரயில் போக்குவரத்தையே விரும்புகின்றனர்.
பயணிகளின் நன்மைகைகளைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் முன் ஒரு பெட்டியை முன்பதிவு செய்யும் வசதியை கொண்டு வந்துள்ளது.
அதுபோல முன்பதிவு செய்துவிட்டு பயனாளரால் வர முடியவில்லை என்றால் அவர் அந்த டிக்கெட் -ஐ தனது குடும்ப உறவினரின் பெயரில் மாற்றிக்கொள்ளலாம்.
இவ்வாறு மக்கள் மத்தியில் தினமும் ரயில் சேவை உள்ளது. விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ரயிலில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை மிகுந்து காணப்படுகிறது.
இந்த நெரிசலைத் தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் ஜூன் 29 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.
இதற்காக அரசு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் கூட்டம் அலைமோதும். எனவே தெற்கு ரயில்வே சென்னை சென்ட்ரல்-நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த சிறப்பு ரயிலானது 28 ஆம் தேதி புதன்கிழமை இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரல்-நெல்லைக்கும், பிறகு 29 ஆம் தேதி வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நெல்லை-சென்னை சென்ட்ரல்-க்கும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே கூறி உள்ளது.