இந்திய குடிமக்களின் மிக முக்கியமான அட்டையாக ஆதார் அட்டை இருந்து வருகிறது. எனவே ஆதார் கார்டில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்கள் சரியாக இருப்பது மிகவும் முக்கியமானதாக அமைகிறது.
சில காரணங்களுக்காக நம்முடைய ஆதார் அட்டையில் கொடுக்கப்பட்டிருந்த விவரங்களையும் அல்லது பெயரில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவற்றை சரி செய்வதற்காக டிசம்பர் 14ஆம் தேதி வரை கால நீட்டிப்பானது செய்யப்பட்டுள்ளது.
டிசம்பர் 14-ஆம் தேதி வரை ஆதார் விவரங்களை இலவசமாக திருத்திக்கொள்ள இந்திய தனித்துவ அடையாள அணையம் (UIDAI) ஏற்பாடு செய்துள்ளது. அதோடு வீடு மாறியவர்கள் தங்கள் முகவரி விவரங்களை ஆதார் கார்டில் கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு :-
✓ ஒவ்வொரு விவரங்களையும் புதுப்பிக்க வரம்பை வைத்துள்ள UIDAI முகவரி புதுப்பிப்புகளுக்கு எந்தவித வரம்பையும் அமைக்கவில்லை. உதாரணமாக பெயரை புதுப்பிக்க 2 முறை மட்டுமே முடியும் என்ற வரைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
✓ திருமணமான பெண்கள் தங்கள் கணவரை பெயரை சேர்த்துக்கொண்டு பயன்படுத்துவது இன்னும் சில ஊர்களில் உள்ளது.எனவே இது போன்ற காரணங்களுக்காக உங்களுடைய பெயரை 2 முறை மாற்றிக் கொள்ளலாம். அதற்கு மேல் மாற்ற UIDAI-இன் சிறப்பு அனுமதி பெற வேண்டும். ஆனால் முகவரி மாற்றத்திற்கு வரம்பே இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான இலவச கால அவகாசம் டிசம்பர் 14ஆம் தேதி வரை மட்டுமே அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின் புதுப்பிக்கும் ஒவ்வொரு முறைக்கும் கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. மேலும், சில விவரங்களை நீங்கள் ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம். ஆனால் பயோமெட்ரிக் விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது.
ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் விவரங்களை புதுப்பிக்கும் முறை :-
✓ முதலில் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
✓ உங்களுடைய ஆதார் நம்பர் மற்றும் ஆதாருடன் தொடர்புடைய மொபைல் நம்பர் ஆகியவற்றை பயன்படுத்தி உள்நுழையவும்
✓ கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரி பார்க்கவும். அதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் மாற்றிக் கொள்ளலாம்.
✓ அதன் பிறகு அதற்கான POA ஆவணத்தை JPEG, PNG மற்றும் PDF ஃபார்மேட்டுகளில் அப்லோட் செய்ய வேண்டும். கண்டிப்பாக பைலின் அளவு 2 எம்பிக்கு குறைவாக இருக்க வேண்டும். உங்களுடைய டாக்குமெண்ட் அப்லோட் செய்யப்பட்ட பிறகு எஸ்ஆர்என் நம்பர் வழங்கப்படும். இந்த எஸ்ஆர்என் நம்பரை வைத்து ஆதார் புதுப்பிப்பு குறித்த நிலையை தெரிந்து கொள்ளலாம்.