அரசியலுக்கு முக்கியம் பேச்சு!! முதலமைச்சர் என்றால் சும்மாவா..விஜயை விமர்சித்த பார்த்திபன்!!

Photo of author

By Gayathri

அரசியலுக்கு முக்கியம் பேச்சு!! முதலமைச்சர் என்றால் சும்மாவா..விஜயை விமர்சித்த பார்த்திபன்!!

Gayathri

Speech is important for politics!! If the chief minister is idle.. Parthiban criticized Vijay!!

புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை நேரில் சென்று சந்தித்துள்ளார் இயக்குனர் பார்த்திபன். அவர் படம் பாண்டிச்சேரியில் எடுப்பதற்காக ஏற்பாடுகள் செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளார். அதனை அடுத்து செய்தியாளர்களை சந்தி த்த அவர், அரசுடைய உதவி இருந்தால் எங்களால் சுலபமாக வேலை செய்ய முடியும் என்பதற்காக சுற்றுலா துறை அமைச்சரை சந்தித்தேன். அமைச்சரே அரசின் மூலமாக படத்திற்கு தேவையான விஷயங்களை பெரும்பாலும் செய்து தருகிறோம் என்று அவர் கனிவோடு கூறியுள்ளார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் தவெக தலைவர் விஜய் குறித்த கருத்துக்களை கேட்ட போது, குறிப்பாக அரசியல் கட்சி தொடங்கினால் ஆரம்பத்தில் கூட்டம் வரும். கட்சி தொடங்கப்படும். ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் நிலைப்பார்களா? என்று ஒரு சந்தேகம் அனைவரிடத்திலும் வரும். ஆனால் நாம் என்கரேஜ் செய்யும் வகையில் அவருடைய வேகத்தை சப்போர்ட் செய்வோம். தடை இருக்குமா? என்று கேட்டால் கட்டாயமாக இருக்கும். அதைத் தாண்டி அவர் வந்தால் தான் தலைவர். உதாரணத்திற்கு ஜல்லிக்கட்டிலேயே மாடு பிடிக்க வேண்டும் என்றால் பல தடைகள் தாண்டி தான் செல்ல வேண்டும். முதலமைச்சர் என்றால் சும்மாவா? மேலும் செய்தியாளர்கள் ஆளுங்கட்சியை குறித்து கடும் விமர்சனம் செய்வதாக கூறிய பொழுது, ஆளுங்கட்சி விமர்சித்து தான் முன்னேற முடியும். பம்மிக் கொண்டு எல்லாம் முன்னேற முடியாது. எம்ஜிஆர், கலைஞர் போன்ற தலைவர்களும் ஆளுங்கட்சி விமர்சித்து தான் தலைவராகினார்கள். நான் பொதுவாக ரசிக்கிறேன். நான் எந்த ஒரு கட்சியையும் சார்ந்தவர் கிடையாது என்பதை பலமுறை கூறியுள்ளேன். கோயம்புத்தூரில் மு.க.ஸ்டாலினை நீங்கள் தான் அடுத்த தலைவர் என்று மஞ்சள் துணி போர்த்தி கூறினேன்.

அது அப்போது சென்சேஷனல் நியூஸ் ஆனது. இப்பொழுது விஜய்யையும் அதேபோல்தான் சப்போர்ட் செய்கிறேன். அதற்காக விஜயிடம் இரண்டு பெட்டி வாங்கியதாக அர்த்தம் கிடையாது. விஜய் கூப்பிட்டால் நீங்கள் போவீர்களா? என்று கேட்டதற்கு நான் நிச்சயமாக போக மாட்டேன் என்றுள்ளார். ஏற்கனவே உள்ளதை விட நன்றாக மாற்றம் ஏற்பட வேண்டும் அதுதான் நல்ல அரசியல் மாற்றம். என்னுடைய கவனம் எல்லாம் சினிமாவில் மட்டும்தான். அவருடைய மேடைப் பேச்சும் மிகத் தெளிவாக இருந்தது. இரண்டு மேடை மட்டும்தான் ஏறியுள்ளார். நம் நாடு பேசிப் பேசி முன் வந்த நாடு. அரசியல் என்றால் பேச்சு மிக முக்கியம். மேடைப் பேச்சில் தவறு இல்லாமல் எப்படி சென்சேஷனலாக பேசினார் என்று நானே வியந்தேன். இதுவரைக்கும் சினிமா மூலம் அரசியலுக்கு நிறைய பேர் வந்திருக்காங்க. இவரும் தற்சமயம் வந்துள்ளார். என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று அவர் கூறியுள்ளார்.