மழை காலங்களை விட குளிர் காலத்தில் தான் சளி,இருமல் மற்றும் காய்ச்சல் பாதிப்பால் பலர் அவதியடைகின்றனர்.குளிர் காலத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தான் இந்த பாதிப்புகள் ஏற்படுகிறது.இந்த நோய் தொற்று பதிப்புகளில் இருந்து தாங்கள் சீக்கிரம் மீள விரும்பினால் மூக்கிரட்டை கீரையில் கசாயம் செய்து மூன்றுவேளை மட்டும் குடிங்க.
தேவையான பொருட்கள்:-
1)மூக்கிரட்டை கீரை – ஒரு கப்
2)கருப்பு மிளகு விதை – கால் தேக்கரண்டி
3)சீரகம் – அரை தேக்கரண்டி
4)மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
5)வெள்ளை பூண்டு பல் – இரண்டு
6)சுக்கு துண்டு – ஒன்று
கசாயம் தயாரிக்கும் முறை:-
1.முதலில் மூக்கிரட்டை கீரையை பறித்து தண்ணீரில் கொட்டி இரண்டு மூன்று முறை சுத்தமாக அலசி வைத்துக் கொள்ள வேண்டும்.
2.அதன் பின்னர் இந்த மூக்கிரட்டை கீரையை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
3.பின்பு அரை தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி மிளகை வாணலியில் போட்டு இரண்டு நிமிடங்களுக்கு குறைவான தீயில் வறுத்து ஆறவைத்து மிக்சர் ஜார் அல்லது கல்வத்தில் போட்டு பவுடர் பதம் வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும்.
4.அடுத்து ஒரு துண்டு சுக்கை நெருப்பில் வாட்டி அதன் தோலை நீக்கிவிட்டு மிக்சர் ஜாரில் சேர்த்து பவுடர் பதம் வரும் அளவிற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
5.அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்த வேண்டும்.
6.பிறகு நறுக்கி வைத்துள்ள மூக்கிரட்டை கீரையை அதில் கொட்டி சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும்.
7.கீரை சாறு கொதிக்கும் சமயத்தில் அரைத்த சீரகம்,மிளகு தூளை அதில் போட்டு கலந்துவிட வேண்டும்.
8.அடுத்து அரைத்து வைத்துள்ள சுக்குத் தூளை அதில் கொட்டி கொதிக்க வைக்க வேண்டும்.அடுத்து இரண்டு வெள்ளை பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு இடித்து கீரை சாறில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
9.பின்னர் கால் தேக்கரண்டி அளவு மஞ்சள் தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.
10.இந்த பானத்தை சிறிது நேரம் ஆறவைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி காலை,மாலை,இரவு என மூன்று வேளை பருகி வந்தால் இரண்டு தினங்களில் நெஞ்சு சளி பாதிப்பு நீங்கிவிடும்.