கடுமையான மூட்டு வலி தொந்தரவை பெரியவர்கள்,சிறியவர்கள் என்று அனைவரும் சந்தித்து வருகின்றனர்.மூட்டு பகுதியில் ஜவ்வு தேய்மானம் ஏற்படுதல்,மூட்டு பகுதியில் அடிபடுதல்,வயது முதுமை,கால்சியம் சத்து குறைபாடு,உடல் பருமன் போன்ற பல்வேறு காரணங்களால் மூட்டு வலி ஏற்படுகிறது.இந்த மூட்டு வலி பாதிப்பு குணமாக முடக்கத்தான் கீரை சூப் செய்து சாப்பிடலாம்.
மூட்டு வலியை குணமாக்கும் முடக்கத்தான் கீரை சூப்:
தேவையான பொருட்கள்:-
1)முடக்கத்தான் கீரை – ஒரு கப்
2)பூண்டு பல் – நான்கு
3)கரு மிளகு – கால் தேக்கரண்டி
4)தக்காளி – ஒன்று
5)மஞ்சள் தூள் – கல் தேக்கரண்டி
6)சீரகம் – ஒரு தேக்கரண்டி
7)உப்பு – சிறிதளவு
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு கப் முடக்கத்தான் கீரையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து இவற்றை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து பாத்திரம் ஒன்றில் போட்டுக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை இடித்து போட்டுக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி சீரகம் மற்றும் கால் தேக்கரண்டி கரு மிளகை உரலில் போட்டு தட்டி முடக்கத்தான் கீரையில் சேர்க்க வேண்டும்.
அதன் பின்பு ஒரு தக்காளி பழத்தை சிறு சிறு துண்டுகளாக அதில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும்.அடுத்து கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
ஒரு கப் பானம் அரை கப் அளவிற்கு சுண்டி வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த சூப்பை இளஞ்சூட்டில் ஒரு கிண்ணத்திற்கு வடித்து கொத்தமல்லி தழை தூவி குடிக்கலாம்.
முடக்கத்தான் கீரை சூப்பை தொடர்ந்து பருகி வந்தால் மூட்டு வலி பாதிப்பு முழுமையாக குணமாகும்.முடக்கத்தான் கீரையில் தோசை,சட்னி,துவையல்,முடக்கத்தான் கீரை வடை என்று விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிட்டு மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.