மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை! டிஃபரென்ட் ரெசிபி இதோ உங்களுக்காக!

0
121

மூட்டு வலியை போக்கும் முடக்கத்தான் கீரை! டிஃபரென்ட் ரெசிபி இதோ உங்களுக்காக!

தேவையான பொருட்கள் : முதலில் புழுங்கல் அரிசிகால் கிலோ, முடக்கத்தான் கீரை1, கட்டு பச்சை மிளகாய் 4, வெங்காயம் 2, சோம்பு அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய்தேவையான அளவு.

செய்முறை :முதலில்  அரிசியை 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பிறகு அரிசியில் கீரை, சோம்பு, 2 பச்சை மிளகாய் சேர்த்து நைசாக அரைத்தக் கொள்ள வேண்டும். மாவில் உப்பு சேர்க்க வேண்டும்.

பிறகு கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தையும் மீதி பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி வதக்க வேண்டும். பிறகு வதக்கிய வெங்காயத்தை மாவில் சேர்த்து தோசை சட்டியில் எண்ணெய் தடவி அதில் ஊற்ற வேண்டும்.

மாவின் மேல் புறமும் எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும். முடக்கத்தான் கீரை தோசை தயாராகி விடும் .

முடக்கத்தான் கீரை சட்னி தேவையான பொருட்கள் :முடக்கத்தான் கீரை1 கட்டு , வெங்காயம் 8 ,பச்சை மிளகாய்2, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு,மிளகாய் தூள் அரை டேபிள் ஸ்பூன், எலுமிச்சை சாறு1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி அதனை அரைத்து கொள்ள வேண்டும் முடக்கத்தான் கீரையை சுத்தம் செய்து தண்ணீர் விட்டு விழுதாக அரைக்க வேண்டும்.

காடயில் எண்ணெய் ஊற்றி அரைத்துவைத்த முடக்கத்தான் கீரை விழுது, வெங்காய விழுது இரண்டையும் ஒன்றாக கலந்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

கலவை வதங்கியபிறகு சிறிது உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி கெட்டிப்படுத்த வேண்டும். பின் எலுமிச்சை சாறு ஊற்றி இறக்கி விட வேண்டும்.

 

Previous articleஆஸ்துமா நோய் எதனால் ஏற்படுகிறது?!..முக்கிய காரணங்கள் என்ன ?..
Next articleஇந்த பிரியாணியில் ஆஹா மனமே தனி சுவை!..சிம்பிள் சோயா பிரியாணி!!