நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்!

0
84
#image_title

நாம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவல்கள்!

1)வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்ற தேங்காய் எண்ணெய் பயன்படுத்தக் கூடாது.

2)கர்ப்பிணி பெண்கள் உள்ள வீட்டை இடிக்க கூடாது. அதேபோல் வீடு பூசுதல், பள்ளம் தோண்டுதல் போன்ற எதையும் செய்யக் கூடாது.

3)அமாவாசை, பௌர்ணமி, ,அஷ்டமி திதியில் முடி வெட்டக் கூடாது.

4)செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை பழைய துடைப்பத்தை தூக்கி எரியக் கூடாது.

5)கர்ப்பமாக இருக்கும் பொழுது மலையேறி சாமி தரிசனம் செய்யக் கூடாது.

6)வீட்டில் உப்பு கல்லை சிதற செய்யக் கூடாது. அதிகாலை நேரத்தில் வர மிளகாயை கடனாக கொடுக்க கூடாது.

7)அம்மிக்கல் மற்றும் ஆட்டுக்கல்லை காலால் மிதிக்க கூடாது. அதன் மீது உட்காரக் கூடாது.

8)கோயிலுக்கு சென்று விட்டு வரும் பொழுது காணிக்கை தானம் செய்யக் கூடாது. செருப்பை கைகளால் தொட்டு விட்டு கடவுளை வணங்கக் கூடாது.

9)குளிகை காலத்தில் தங்கம், சொத்து, வைரம், மனை வாங்கினால் அவற்றை மீண்டும் மீண்டும் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.

10)சமைப்பதற்கு அரிசியை எடுக்கும் பொழுது குனிந்து எடுக்கவும். இவ்வாறு செய்யும் பொழுது நாம் அதற்கு மதிப்பு கொடுப்பதாக அர்த்தம். இதனால் வீட்டில் அன்னத்திற்கு குறை ஏற்படாது.