ஆன்மீகம்: இவை எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

Photo of author

By Divya

ஆன்மீகம்: இவை எல்லாம் செய்யக் கூடாத விஷயங்கள் என்று தெரியுமா உங்களுக்கு?

*நம் வீட்டில் கோலம் போடாமல் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு விளக்கு ஏற்றமானால் கோயிலுக்கு செல்லக் கூடாது.

*எரியும் விளக்கில் உள்ள எண்ணெய் அல்லது நெய்யைத் தொட்டு நம் தலையில் தடவக் கூடாது.

*சாமி படங்களில் காய்ந்த பூக்கள், மாலைகள் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

*தன்னையே சுற்றிக் கொண்டு சாமி கும்பிடக் கூடாது.

*கண்ணாடி பார்த்துக் கொண்டு திருநீறு பூசக் கூடாது.

*இறந்தவர்கள் படங்களை பீரோவில் வைக்க கூடாது. ஒருவேளை வைத்திருந்தால் அதை உடனே அப்புறப்படுத்தவும்.

*கிழிந்த துணி, நெருப்பு பட்ட துணி உள்ளிட்டவைகள் பீரோவில் இருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தவும்.

*மூன்று தலைமுறைக்கு முன் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை பீரோவில் வைக்கக் கூடாது.

*பணப்பெட்டி அருகில் கத்தி,கத்தரிக்கோல், ஊசி போன்ற கூர்மையான பொருட்களை வைக்கக் கூடாது.

*மாத்திரை, மருந்துகள் போன்றவற்றை பணப்பெட்டி இருக்கும் இடத்தில் வைக்கக் கூடாது.

*பணம் வைக்கும் பர்ஸில் மருந்து, பில்கள், இரும்பு சாவி, ஊக்கு பின் போன்றவற்றை வைக்கக் கூடாது.