பழனி: அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் இன்று முதல் 32 நாட்களுக்கு அதிகாலை 3 மணிக்கு மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெறுவம்.
அதற்காக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் மலையேற நிர்வாகம் அனுமதி வழங்கியது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்படும். அதன் பின்பு அதிகாலை 4.30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.