ஆன்மீகம்: மனைவி கருவுற்று இருக்கும் பொழுது கணவர் இதையெல்லாம் செய்யவே கூடாது!

Photo of author

By Divya

ஆன்மீகம்: மனைவி கருவுற்று இருக்கும் பொழுது கணவர் இதையெல்லாம் செய்யவே கூடாது!

தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைக்கின்ற வரம். இவை எல்லா பெண்களுக்கும் கிடைப்பதில்லை. மனைவி கருவற்று இருக்கும் பொழுது கணவர் சில விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

மீறி செய்தால் அது மனைவி மற்றும் பிறக்கும் குழந்தையை தான் பாதிக்கும். அவ்வாறு மனைவி கருவுற்று இருக்கும் பொழுது கணவர் செய்யக் கூடாத செயல்கள்….

மனைவி கருவுற்று இருந்தால் கணவர் தாடி, மீசை, தலைமுடி வளர்ப்பது வழக்கமான ஒன்று தான். சிலர்… குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று வேண்டுதல் வைத்திருப்பார்கள்.

ஆனால் அதே தலைமுடியை மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது மொட்டை போடக் கூடாது. மனைவி கர்ப்பம் தரித்து விட்டார் என்பது உறுதியானால் கணவன் மாலை போட்டுக் கொண்டு மலையேறி கடவுளை வணங்கக் கூடாது.

குழந்தை பிறக்கும் வரை கடவுளுக்கு ஆடு, கோழி போன்று எந்த ஒரு விலங்கையும் பலி கொடுக்கக் கூடாது. அதேபோல் மனைவி கர்ப்பமாக இருக்கும் பொழுது கணவர் ஆழமான நீரில் நீராடக் கூடாது.