மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு!

Photo of author

By Rupa

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு!

Rupa

Split the skull! BJP leader's rowdy speech!

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு!

பீகார் மாநிலத்தில் பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்துகொண்டார்.அப்போது அவர் கூறியது,தனக்கு பொது மக்களிடமிருந்து அரசு ஊழியர்கள் தங்களது புகார்களை சிறிதளவும் கூட கவனம் செலுத்துவதில்லை என்ற புகார் அடிக்கடி வருகிறது.அதற்கு கிரிராஜ் கூறியது,மக்கள் அளிக்கும் புகார்களுக்கு செவி கொடுக்காத ஊழியர்களை மூங்கில் தடியை எடுத்து அவர்களின் மண்டையை பிளந்து விடுங்கள் என்றார்.இவர் இவ்வாறு பதிலளித்தது மக்களுக்கு வியப்பை கொடுத்தது.

இதனைத்தொடர்ந்து அவர் கூறியது,மக்களின் கோரிக்கைகளை தீர்க்க தான் நாடாளுமன்ற உறுபினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,கிராம பிரதிநிதிகள் மற்றும் ஆட்சியர் என நியமித்துள்ளனர்.மக்களின் கோரிக்கைகளை கேட்காத ஊழியர்களுக்கு தக்க விதத்தில் தண்டனை கொடுத்தால் மட்டுமே அவர்கள் வேலைகளை சரியாக செய்வார்கள் எனக் கூறினார்.மேலும் அரசு ஊழியர்கள் உங்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றால் என்னிடம் கூறுங்கள் நான் பார்த்து கொள்கிறேன் என்று சினிமா பட வில்லன் போல் மிரட்டியுள்ளார்.இவர் பேசிய இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இவ்வாறு மிராட்டுவதால் அரசு ஊளியர்கள் தங்களது பணிகளை சரியாக செய்வார்கலா என்பது சந்தேகமடைய தான் செய்கிறது.தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில் மக்களை தங்கள் கட்சியின்  பக்கம் இழுப்பதற்கு இவ்வாறு சினிமா பட பாணியில் பேசியுள்ளாரா என்பது அனைவரையும் யோசிக்க வைக்கிறது.