சினிமாவில் பாடும் நிலா என அழைக்கப்படக்கூடிய எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் தெலுங்கில் முதன்முதலில் பாடகர் ஆக அறிமுகமாகி அதனை தொடர்ந்து கன்னடத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் தான் தமிழில் பாடகராக அறிமுகம் ஆனார். இவருடைய மறைவானது பலருக்கும் இன்று வரை வருத்தத்தை அளிக்கக்கூடிய விஷயமாகவே இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பிரபல நடிகர் ஒருவர் தன்னால் தான் எஸ்பிபி அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாகவும் அவர் மறைவுக்கு தான் காரணம் என்றும் அந்த குற்ற உணர்ச்சி தன்னை மிகவும் வாட்டுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஒருவகையில் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மைத்துனராக இருந்த மற்றும் தொலைக்காட்சிகளில் நடிக்கக்கூடிய நடிகரான சுபலேகா சுதாகர் அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் எனக்கு மைத்துனர் ஆக இருந்த பொழுதிலும் அவரை தான் சார் என்று தான் அழைப்பதாகவும், கோவிட் பரவி இருந்த சமயத்தில் ஹைதராபாத்தில் இருந்த பிலிம் சிட்டியில் தொலைக்காட்சி தொடர் ஒன்று எடுக்கப்பட்ட பொழுது பாதுகாப்பு சிறப்பாக இருக்கிறது என்று கூறி வரவழைத்தேன் என தெரிவித்துள்ளார்.
அவ்வாறு தான் கூறி வரவழைத்ததால் தான் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கொரோனா தொற்றானது ஏற்பட்டது என்றும் அவருடைய மரணத்திற்கு நான் காரணமாக இருப்பது எனக்கு மிகவும் குற்ற உணர்ச்சியாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார். மேலும் சாகும்வரை இந்த குற்ற உணர்ச்சியானது என்னை விட்டு நீங்காது என அவர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.