மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்!

Photo of author

By Rupa

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்!

கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை.அரசாங்கமும் மக்களை காப்பாற்ற பல திட்டங்களை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி கரோனா தொற்றானது அதிகரிக்கும் வேளையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி விடுகின்றனர்.இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அரசாங்கமும் நல உதவிகளை செய்தாலும் அந்த உதவிகள் அனைத்தும் மக்களுக்கு ஈடாக வதில்லை.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கும் மக்கள் சந்தித்து வருகின்றனர்.

இந்த வேளையில் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி தற்போது வரை மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று பாடம் கற்பிக்கவில்லை. ஆன்லைன் முறையிலேயே பாடங்களைக் கற்பித்து வருகின்றனர்.தற்பொழுது இரண்டாவது அலை முடிந்த நிலையில் மூன்றாவது அலைக்கு அனைவரும் தயாராகிக் கொள்ளுங்கள் என மருத்துவ ஆராய்ச்சிகள் கூறி வருகின்றனர்.இந்நிலையில் பள்ளிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு கூறி வருகிறது.அதற்கான நெறிமுறை கோட்பாடுகளும் நடந்து வருவதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

தமிழகத்தை தவிர இதர மாநிலங்களான கேரளா,பஞ்சாப் போன்றவற்றில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் இன்றளவும் நடந்து வருகிறது.அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு கரோனா விதிமுறைகளுடன் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்கின்றனர்.அவ்வாறு பல விதிமுறைகளை கடைப்பிடித்தாலும் பஞ்சாபில் உள்ள லூதியானா, அபோகார்,நவன்சாகர்,அமிர்தசரஸ் ஆகிய மாவட்டங்களில் 27 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இத்தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க தினசரி 10,000 பரிசோதனைகள் நடந்து வருகிறது.

மேலும் ஒரு மாணவரிடம் இருந்து மற்றொரு மாணவருக்கும் தொற்று பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகளையும் அமல்படுத்தி உள்ளனர்.இது நாளடைவில் தொற்று பரவல் அதிகமானால் பள்ளிகள் மீண்டும் மூடும் நிலைக்கு வந்துவிடும்.பஞ்சாப் மாநிலத்திலேயே பல கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படும் பள்ளிகள் திறந்த ஒரு வாரத்திற்குள் 27 பேருக்கு தொற்று எளிதாக பரவி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் கோயம்புத்தூர்,திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் எதிர்ப்பு சக்தியானது குறைந்து காணப்படுகிறது.இந்த மாவட்டங்களில் மாணவர்களுக்கு தொற்று பரவல் ஒருவருக்கு ஏற்பட்டால் உடனுக்குடன் மற்றவருக்கு பரவ அதிக வாய்ப்புகள் உள்ளது. அந்தவகையில் பள்ளிகள் திறப்பது தாமதமாக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.