World

பிரபல கிரிக்கெட் வீரர் கைது; எதிர்பாராத சம்பவத்தில் சிக்கினார்..!!

இலங்கையில் உள்ள பனதுரா என்ற பகுதியில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் குசல் மெண்டிஸ் காரை ஓட்டிவந்த போது சைக்கிளில் சென்ற 64 வயது முதியவரை இடித்து கீழே தள்ளியுள்ளார். இந்த விபத்தில் அந்த முதியவர் உயிரிழந்தார். இதையடுத்து மெண்டிஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை பனதுரா ஹொரேதுடுவா என்ற பகுதியில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த செய்தியை இலங்கை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதையடுத்து மெண்டிஸ் மருத்துவரின் சோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

குசல் மெண்டில் கைதான சம்பவம் உறுதி செய்யப்படாத நிலையில், மெண்டிஸ் கைது செய்யப்பட்டதை போலீஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.எஸ்.பி ஜாலியா சேனரத்தனே உறுதிபடுத்தியுள்ளார். இந்த விபத்தில் பலியானவர் பனதுராவில் உள்ள கோரகபோலா பகுதியில் வசிப்பவர் என்று தெரியவந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு விளையாட்டு பயிற்சியை தொடங்கி இருந்த நிலையில் எதிர்பாராத விபத்து சம்பவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். மெண்டிஸ் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 2,995 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 2,167 ரன்களும், 26 டி20 போட்டிகளில் விளையாடி 484 ரன்கள் குவித்துள்ளார்.

Leave a Comment