இலங்கை: ஈழ இனப்படுகொலையின் போது 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ராணுவத்தினரை கொன்றதாக கருணா அம்மான் பேசியிருப்பது இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வருகின்ற ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அம்பாறை பகுதியில் அண்மையில் நடந்த பிரச்சாரத்தின் போது விடுதலைப் புலிகளின் முன்னாள் துணைத் தலைவரும், அகில இலங்கை திராவுத மகாசபை கட்சியின் தலைவருமான கருணா அம்மான் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அக்கூட்டத்தில், நான் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தபோது ஆனையிறவில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் சிங்கள ராணுவத்தை கொன்றேன். அதேபோல் கிளிநொச்சியிலும் அதிகம் கொன்றேன் என கூறினார். கொரோனா கொன்றதை விட அதிகமானோரை நானே கொன்றேன் என பிரச்சாரத்தின் போது பேசினார். இச்சம்பவம் இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் விசாரணை நடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து லங்கை பத்திரிகை ஊடகங்கள் கொரோனாவை விட ஆபத்தானவர் கருணா என்று எழுதின. இதனால் ராஜபக்சேவுடன் அரசியல் கூட்டணியாக போட்டியிட வேண்டிய சூழல் தடைபட்டது. கருணாவின் கட்சியை ராஜபக்சே கூட்டணியில் இருந்து வெளியேற்றியுள்ளார்.