மு.க.ஸ்டாலினுடன் பாரிவேந்தர்! SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலை பற்றி ஆலோசனையா?

0
204

மு.க.ஸ்டாலினுடன் பாரிவேந்தர்! SRM பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலை பற்றி ஆலோசனையா?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய ஜனநாயக கட்சி தலைவரும் பிரபல SRM பல்கலைக்கழகத்தின் உரிமையாளருமான திரு.பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் நேற்று திடீரென சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சந்திப்பு நிகழ்வில், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பாக கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் சிறந்த தமிழறிஞர்களுக்கு பல்வேறு பெயர்களில் ‘தமிழ்ப்பேராயம்’ விருது வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் திரு.கலைஞர் கருணாநிதி பெயரிலும் தமிழ்ப் பேராயம் விருது வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கவே வந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர்.

மேலும் கலைஞர் கருணாநிதிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு தனது நாடாளுமன்ற உறுப்பினரின் ஒரு மாத ஊதியத்தை மு.க.ஸ்டாலினிடம் வழங்கியதாகவும் தெரிவித்தார். வேறு எதுவும் பேசாமல் விட்டாலும் பல சந்தேகங்களை இந்த சந்திப்பு நிகழ்வு எழுப்பி உள்ளது.

கேரளாவைச் சேர்ந்த சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்தீப் சில தினங்களுக்கு முன்பு கல்லூரி விடுதியில் தற்கொலை செய்து கொண்டார்.இவருடைய மரணம் நாடு முழுவதும் பரவலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அளவிற்கு ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப்க்கு முக்கியத்துவம் கொடுத்து நீதி கேட்டு போராடி வருகின்றனர்.

இதில் முதன்மையாக நின்று செயல்படுபவர் திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தான். கல்வி நிலையங்களைக் காவிமயமாக்குவதைத் தவிர்த்து, நம் தேசியக் கொடியில் உள்ள வண்ணங்களைப் போல, அனைவரையும் சமமான உரிமையுடன் நடத்தும் போக்கு மேம்பட ஆவன செய்ய வேண்டும் என்றும் இந்த தற்கொலை நிகழ்வுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசின் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறார். நேற்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தனது மகள் தற்கொலையில் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்தார்,.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்று பச்சமுத்து அவர்கள் ஸ்டாலினை சந்தித்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. கடந்த ஓராண்டில் SRM பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பல்கலைக்கழக வளாகத்திள் உள்ளேயே அடுத்தடுத்து மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டனர். இதனை ஒரு சில மீடியாக்கள் மட்டுமே வெளிக்கொண்டு வந்தன.

பல மீடியாக்கள் இதனை செய்தியாக கூட வெளிப்படையாக வெளியிடவில்லை, மேலும் இதை மூடி மறைத்தது இந்த தற்கொலைக்கு நீதி கேட்டு எவரும் முன்வராத அளவிற்கு செய்துவிட்டது பாரிவேந்தரின் SRM பல்கலைக்கழகம்,. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும் ஒரு இரங்கல் செய்தியை கூட வெளியிடவில்லை.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தை பற்றி பல மர்மங்கள் நீடித்துக் கொண்டே வருகின்றன,. பெரும்பாலும் இங்கு படிக்கும் மாணவர்கள் வசதி படைத்தவர்களாகவும் மற்ற மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தான் உள்ளனர்,.

செய்தி சேனல்கள் பெரும்பாலும் திமுக கட்டுப்பாட்டில் உள்ளதால் SRM மாணவர்களின் தற்கொலையை அப்பட்டமாக மறைக்கும் விதமாக செயல்பட்டன. பாத்திமா தற்கொலையை விவாதமாக எடுத்து நடத்திக்கொண்டிருக்கும் “புதிய தலைமுறை தொலைக்காட்சி” தனது உரிமையாளரான பாரிவேந்தரின் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களின் தற்கொலைகள் நிகழ்வை செய்தியாக கூட வெளியிடவில்லை.

சமூகவலைத்தளங்களில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களின் தற்கொலை பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என்று மு.க.ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்கள் மூலமாக சமூகவளைத்தளவாசிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்,.

இதனால் மு.க.ஸ்டாலின் அவர்கள் அழுத்தம் காரணமாக திடிரென அறிக்கை விட்டால் தனது இமேஜ் மொத்தமாக பாதித்து விடும் என்பதால் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வென்ற SRM பல்கலைக்கழக தலைவர் பாரிவேந்தர் அவர்கள் அவசரஅவசரமாக ஸ்டாலினை சந்தித்து பேசியதாக தெரிகிறது,. ஏற்கனவே முரசொலி இடம் பஞ்சமி நிலம் தான் போன்ற எதிர்ப்பை பச்சமுத்து என்கின்ற பாரிவேந்தர் அவர்களும் SRM பல்கலைக்கழகம் மூலமாக பிரச்சனைகளை சந்தித்து வருவதால் இதனை பற்றியும் பேசியதாக தெரிகிறது,.

தனது கூட்டணி கட்சியான பச்சமுத்துவை தனது கட்சியின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற வைத்து அழகு பார்த்த மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் தற்கொலையை பற்றியும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று விரைவில் அறிக்கை விடுவார் என்று பொதுமக்களும் எதிர்பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர்.

Previous articleஐஐடி மாணவி பாத்திமா மரணத்திலும் அரசியல் ஆதாயம் தேடுகிறாரா ஸ்டாலின்??!
Next articleமுரசொலி பஞ்சமி நில விவகாரம்! திமுகவை கதிகலங்கச் செய்யும் தேசிய எஸ்சி எஸ்டி ஆணையம்