பாமக மீதான பயத்தால் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை! மு.க.ஸ்டாலின் உத்தரவால் விசிக அதிர்ச்சி

0
216

பாமக மீதான பயத்தால் திருமாவளவன் பிரச்சாரம் செய்ய தடை! மு.க.ஸ்டாலின் உத்தரவால் விசிக அதிர்ச்சி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக திருமாவளவன் பிரச்சாரம் செய்ய மு.க.ஸ்டாலின் தடை போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வன்னியர்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தொகுதி என்பதால் திருமாவளவன் பிரச்சாரம் செய்தால் நமக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்று அங்குள்ள திமுக நிர்வாகிகள் தலைமைக்கு தகவல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இது மு.க.ஸ்டாலின் காதுக்கு எட்டிய உடன் நிலைமை என்ன என்று திமுக மாவட்ட செயலாளர் பொன்முடியின் கேட்டுள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை அதிமுக மற்றும் திமுகவுக்கு இணையான வாக்குகள் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் உள்ளதால் மேலும் வன்னிய இளைஞர்கள் பெரும்பாலும் பாமகவில் உள்ளதால், தேர்தலில் வெற்றி பெற இவர்கள் தடையாக இருப்பார்கள் என்றும், இவர்களின் வாக்குகள் சிதறடிக்க வேண்டும் என்றால் திருமாவளவன் நம் கூட்டணியில் இருப்பதையே காட்டக்கூடாது என்றும்,

திருமாவளவன் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தால் பாட்டாளி மக்கள் கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதிமுகவிற்கு அனைத்து வாக்குகளையும் திருப்பி விட்டுவிடும், ஏற்கனவே சரக்கு மிடுக்கு எங்கிட்டதான் இருக்கு என்ற திருமாவளவன் பேசிய வசனத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் காட்டி கொண்டு வருகின்றனர்.

திருமாவளவன் கட்சியை சேர்ந்தவர்களை பிரச்சாரத்தில் ஈடுபடுத்தினாலயே ஒரேயடியாக நம்மை கவிழ்க்க வழி கிடைத்துவிடும். இதனால் கவனத்துடன் தான் செயல்பட வேண்டும் என்று பொன்முடி சொல்லி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தலில் தேர்தல் போல் இந்த தேர்தல் நடைபெறாது என்றும் இங்கு உதயநிதிஸ்டாலின் போன்றவர்களின் பேச்சு எல்லாம் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வார்கள் என்று திமுக நிர்வாகிகளே சொல்லி வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை செய்யும் கட்சித் தலைவர் திருமாவளவன் திமுகவிற்காக பிரச்சாரம் தடை போட்டது போல் விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் மு.க.ஸ்டாலின் தடை போடுவது 100% உறுதியாகியுள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Previous articleதமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு தலைவராக பதவியேற்கும் முதல் பெண்!
Next articleநியூசிலாந்து பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை