நாயுடு ஸ்டாலின் மீட்டிங்.. பக்கா ஸ்கெட்ச்!! வாயடைத்த மோடி எல்லாமே பிளாப்!!
இந்த மக்களவை தேர்தலில் திமுக தமிழ்நாட்டில் 40/ 40 என்ற இடத்தை பிடித்து வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளது.இந்நிலையில் பாஜக தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது கூட்டணி கட்சிகளின் ஆதரவை நாடி உள்ளது.அந்த வகையில் ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு நாயுடு வெற்றி பெற்றுள்ளார்.மேற்கொண்டு பாஜக தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்டோரின் ஆதரவோடு மத்தியில் அமரவுள்ளது.
இவர்களின் ஆதரவால் அமைச்சரவையில் மாற்றம் முக்கிய பதவிகளில் நிர்வாகிகள் மாற்றம் போன்ற-வை குறித்து ஆலோசனையும் செய்யப்பட்டு வருகிறது.அந்த வகையில் நீர்வளத்துறை வேளாண்துறை உள்ளிட்ட பதவிகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறுகின்றனர்.குறிப்பாக நீர்வளத்துறை பதவியானது இருவரில் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் கூட தமிழகத்திற்கு அது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று ஒரு பக்கம் பேச்சு இருக்க தான் செய்கிறது.
இதன் மத்தியில் இதனை சரி கட்ட ஆரம்ப கட்ட காலத்திலிருந்து காங்கிரஸானது இரு கட்சிக்கும் அழைப்பு விடுத்தது.ஆனால் அவர்கள் எதற்கும் ஒப்புக்கொள்ள வில்லை.குறிப்பாக தேர்தலுக்குப் பிறகு யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்தும் ஆட்சி மாறுவது குறித்தும் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது.ஆனால் சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமார் ஆகிய இருவரும் திட்டவட்டமாக பாஜகவுடன் தான் கூட்டணி என்று தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் தெலுங்கு தேசம் சந்திரபாபு நாயுடு வை முதல்வர் திடீரென்று விமான நிலையத்தில் சந்தித்துள்ளார்.இது பாஜக இடையே சற்று அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் நுழைந்ததிலிருந்தே கருணாநிதி மற்றும் சந்திரபாபு நாயுடு இருவருக்கும் உள்ள உறவு இன்றியமையாதது.தற்பொழுது இரு மாநிலங்களிலும் இவர்களது ஆட்சி கொடி கட்டி பறக்கும் நிலையில் இது குறித்து பாராட்டு தெரிவிக்க பேசப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.அதுமட்டுமின்றி முன்னதாகவே சரத் பாவர் அவர்கள் சந்திரபாபு நாயுடு-விடம் காங்கிரஸில் வந்து இணைந்து கொள்ளுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அவரோ, மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை என்று ஒன்று உள்ளது.அதற்கு மாறாக தன்னால் நடக்க இயலாது.அதனால் பாஜகவுடன் உடன்பட்டு செயல்பட உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து ஸ்டாலின், நம்முடன் தெலுங்கு தேசம் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்திருந்தார்.இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஸ்டாலின் அவர்கள் திடீரென்று சந்தித்துக் கொண்டது அனைவரிடத்திலும் கேள்வியை எழுப்பி உள்ளது.
குறிப்பாக தமிழகத்திற்கு உண்டான பல கோரிக்கைகளை தனது நண்பர் சந்திரபாபு நாயுடு மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்ற திட்டத்தை ஸ்டாலின் கையில் வைத்திருப்பதாகவும் கூறுகின்றனர்.இனி நேரடியாக டெல்லிக்கு செல்லாமல் இவர் மூலம் காயை நகர்த்தலாம் என்பதே இதன் நோக்கம் எனக் கூறுகின்றனர்.